AR ரஹ்மான் நிகழ்ச்சி குளறுபடிக்கு காரணம் நானா..? – புலனாய்வு புலிக்கு விஜய் ஆண்டனி கொடுத்த பதிலடி..!

சமீபத்தில் நடந்து முடிந்த மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கலவரங்கள் குறித்து புதிதாக எதுவும் சொல்லத் தேவையில்லை.

அதிக அளவிலான டிக்கெட்டுகளை விற்று கடுமையான கூட்ட நெரிசலை ஏற்படுத்தியது. போக்குவரத்து பாதிப்பு, உச்சகட்டமாக முதலமைச்சரின் காண்வாய் 20 நிமிடங்கள் சாலையில் சிக்கியது. வரி ஏய்ப்பு, முறையாக அனுமதி பெறாதது, தீயணைப்பு துறைக்கு தாவல் தெரிவிக்காதது, பெண்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல் இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இந்த இசை நிகழ்ச்சியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

நாளுக்கு நாள் இந்த பிரச்சனையின் விவகாரம் பெரிதாகிக் கொண்டே போகும் நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தான் இது அனைத்திற்கும் காரணம் என்று மார்ஸ் தமிழ்நாடு என்ற youtube சேனலில் புலனாய்வு அறிக்கை என்ற பெயரில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோவில் பேசும் பெண்மணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தான் இந்த இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு மூல காரணம் என்றும் அவர் தன்னுடைய ஊடக நண்பர் ஒருவருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றும் சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

விஜய் ஆண்டனி அந்த வாய்ஸ் மெசேஜில் “பெருசு இப்பதான் சிக்கி இருக்கு.. விட்டுடாதீங்க,.,,” என்று பேசியதாக கூறுகிறார்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் ஆண்டனியா இப்படி செய்தார்..? என்று பலரும் வியந்து கொண்டு இருந்த நேரத்தில் விஜய் ஆண்டனி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

யூடியூப்பில் ஒரு பெண்மணி என்னை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெற்ற குளறுபடிகளுக்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார். இது முற்றிலும் பொய்யான செய்தி.

அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடுக்க இருக்கிறேன். அதன் மூலம் வரக்கூடிய பணத்தை ஏழை குழந்தைகளுக்கு தானம் கொடுக்க விரும்புகிறேன் என ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே ஸ்டிங் ஆபரேஷன் என்ற பெயரில் ஊடக நெறியாளர்களுக்கு பணத்தாசை காட்டி அவர்களுக்கு மது விருந்து வைத்து அவர்கள் நண்பர்கள் என நம்பி பேசிய சில விஷயங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை இணையத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியவர்கள் இந்த யூடியூப் சேனல் நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டிங் ஆபரேஷன் என்றால் ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்கு இருப்பவர்களுக்கு தெரியாமல் அதனை பதிவு செய்து வெளியிடுவது.

ஆனால் இவர்கள் ஒரு பிரச்சனையை இவர்களாகவே பணம் கொடுத்து உருவாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்காக பெருமளவில் இவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படுகிறது என்று பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தகவலை வெளியிட்டிருந்தார்.

ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சி என்று கூறுவார்கள்.. அது போல தற்பொழுது விஜய் ஆண்டனியை கடித்துள்ளது இந்த மார்ஸ் தமிழ்நாடு யூட்யூப் சேனல்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர் கூறியது போல மான நஷ்ட வழக்கு தொடுப்பாரா..? இவர்கள் சிறை செல்வார்களா..? அல்லது நஷ்ட ஈடு கொடுப்பார்களா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …