மறக்குமா நெஞ்சம்..! – டிக்கெட் வசூலில் A R ரஹ்மான் Share எவ்ளோ-ன்னு தெரிஞ்சா மறக்கவே மாட்டீங்க..!

A R ரஹ்மான் : கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோலத்தான் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினோம் ஆனால் அமர்வதற்கு இடம் இல்லை என்ற பிரச்சனை ஆரம்பித்து தற்போது ஜிஎஸ்டி மோசடி கார்ப்பரேஷன் வரி மோசடி விதிமீறல் சட்டத்திற்கு புறம்பாக டிக்கெட் விற்பனை செய்தது போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தது என பல்வேறு வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது ஏ ஆர் ரகுமான் பாடிய மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி,

கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் விற்ற வகையில் வசூல் செய்யப்பட்டிருக்கிறது., அதில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் பங்கு மட்டும் 55 சதவீதமாம்.

அப்படி என்றால் 16 கோடியில் 55 சதவீதம் என பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட 8 கோடியே 85 லட்சம் ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.

அதாவது ஒரு மணி நேரம் மேடையில் பாடுவதற்கு ஏ ஆர் ரகுமான் பெற்றிருக்கக் கூடிய சம்பளம் 8 கோடியே 80 லட்சம் ரூபாய்.

மறுபக்கம், 16 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சி நடந்த மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 20% கேளிக்கை வரி 3 கோடியே 22 லட்சம் ரூபாய் வருகிறது.

மேலும், 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்த வேண்டி இருக்கிறது. அதன்படி 2 கோடியே 89 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருகிறது. இந்த இரண்டு வரியையும் அந்த நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் செலுத்தவில்லை.

இப்படி வரி மோசடி மட்டும் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் நடந்திருக்கிறது. 50 ரூபாய் தண்ணீர் வரி கட்டவில்லை என்றாலே கார்ப்பரேஷன் பைப் வாட்டர் கட் செய்துவிடும் அரசு இயந்திரம் 6 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மீதும் அதற்கு உடந்தையாய் இருந்த ஏ ஆர் ரகுமான் மீதும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.

டிக்கெட் 90 சதவீதம் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது என்பதை ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்த நிறுவனங்களிடமிருந்து எளிமையாக பெற்றுவிட முடியும்.

இதன் மூலம் கடுமையாக நடவடிக்கைகளை எடுக்க முடியும். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தெரியவில்லை. நாட்கள் தான் கடந்து கொண்டிருக்கிறது. பெரிய பிரபலங்கள் என்றால் ஒரு சட்டம்..? சாமானியர்களுக்கு ஒரு சட்டமா..? என்ற கேள்விகள் இணைய பக்கங்களில் காரசாரமான விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …