அந்த இடத்துல என் மகள் மட்டும் தான் பெண்.. மற்ற எல்லோரும் ஆண்கள்.. ஆனால்..! – அர்ச்சனா நெகிழ்ச்சி..!

பிரபல தொகுப்பாளனி மற்றும் நடிகை அர்ச்சனா சமீபத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது பொதுவாக மீடியா என்றாலே பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு இடமாக பார்க்கப்படுகிறது. அதிலும் சினிமா இன்னும் மோசமான நிலையில் தான் பலராலும் பார்க்கப்படுகிறது.

ஆனால், சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்கும் போது எங்களுக்கு கிடைத்த முதல் விஷயம் பாதுகாப்பு.

டாக்டர் படத்தில் நடிக்கும் போது நடிகைகள் துணை நடிகைகள் என அனைவரும் தங்களை பாதுகாப்பாக உணர்ந்தார்கள். எடுத்துக்காட்டாக ஒரு காட்சியில் என்னுடைய மகள் கடத்தப்படுவார்.

அந்த படகில் என்னுடைய மகள் மட்டும் தான் பெண் மற்ற அனைவரும் ஆண்கள். நான் அவளிடம் கேட்டேன்.. நீ இதை பண்ணிடுவியா..? என்று கேட்டேன்.. எதுவும் பிரச்சினை இல்லை நான் செய்து விடுவேன் என்று தைரியமாக கூறினார்.

அந்த அளவுக்கு அந்த படத்தில் பாதுகாப்பாக உணர்ந்தோம். படகில் சென்று படப்பிடிப்பு முடித்துவிட்டு அதன் பிறகு என்னிடம் என் மகள் வருவதற்கு கிட்டத்தட்ட 4, 5 மணி நேரம் ஆகிவிட்டது.

சென்ற இடத்தில் இவளுக்கு என்ன வேண்டும்.. கழிவறை வசதி என்ன வேண்டும்.. என்று அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு படப்பிடிபில் ஒரு சினிமாவில் அவ்வளவு பாதுகாப்பாக உணர்ந்த தருணம் சிவகார்த்திகேயன் படத்தில் தான் என்று நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார் நடிகை அர்ச்சனா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …