“டைட்டான ட்ரெஸ் போட்டுக்கிட்டு..” – சும்மா.. இணையத்தை அலறவிடும் அர்ச்சும்மா..!

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் அர்ச்சனா ( Archana Chandhoke ) மீண்டும் ரேடியோ ஜாக்கி பணிக்கு திரும்ப உள்ளார். தொகுப்பாளினி அர்ச்சானாவுக்கு அறிமுகமே தேவையில்லை.

தமிழகம் முழுவதும் அறியப்படக்கூடிய முன்னணி தொகுப்பாளர்களில் அவரும் ஒருவர்.பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். விஜய் டிவி, ஜீ தமிழ் என தமிழ் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் Mr and Mrs சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் மா.கா.பா ஆனந்துடன் இணைந்து தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

அண்மையில் அவர் பதிவிட்ட பாத்ரூம் டூர் வீடியோ, மெகா ஹிட்டானது. கன்டென்ட் மற்றும் மீம் கிரியேட்டர்கள் பலரும் அவரது கன்டென்டை காப்பியடித்து தங்களுக்கான கன்டென்டாக மாற்றிக்கொண்டனர்.

கடும் விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும்கூட இதில் எதிர் கொண்டார். இது குறித்து அர்ச்சனா பல்வேறு விளக்கங்களையும் கொடுத்தார்.அவரை சுற்றி எப்போதும் சர்ச்சைகள் உருவானாலும், பாசிடிவாகவே அதனை டீல் செய்யும் அர்ச்சனா, தற்போது ரேடியோ ஜாக்கி பணிக்கு மீண்டும் திரும்புகிறார்.

அவருக்கு ஏற்கனவே அனுபவம் இருந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தப் பணிக்கு திரும்புவதால், புதிய உற்சாகமும், குதூகலமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

மிர்ச்சி தமிழ் ரேடியோவில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி மற்றும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம், ஜீ தமிழில் ச ரீ கம பா சீசன் ஒன்று மற்றும் இரண்டு, ச ரீ கம பா சாம்பியன்ஸ், செலிபிரிட்டி கிட்சன், காமெடி டைம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

மகள் ஸாராவுடன் இணைந்து சூப்பர் மாம் நிகழ்ச்சி சீசன் 1 மற்றும் 2 நிகழ்ச்சியை தொகுப்பாளராக பணியாற்றிய அவர், ஜூனியர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள்.. அட்டகாசம் அச்சுமா என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …