“பாவாடையை தூக்கு… அது சரியா இருக்கான்னு பாக்கணும்..” -இயக்குனர் மீது பகீர் குற்றச்சாட்டு வைத்த அர்ச்சனா..!

அர்ச்சனா : சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சீரியல் நடிகைகளும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறார்கள். சின்னத்திரை நடிகைகளுக்கும் இணையப் பக்கங்களில் மவுசு அதிகமாகவே இருக்கின்றது என்று தான் கூற வேண்டும்.

திரைப்படங்களில் சின்னத்திரை நடிகர்களின் ஆதிக்கம் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே போகின்றது. பட வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரைக்கு வந்து கொண்டிருந்த நடிகைகள் இந்த நிலையில் தற்போது சின்னத்திரையில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதன் மூலம் சினிமாவிற்கு செல்லும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில், சீரியல் மற்றும் சினிமா என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகை அர்ச்சனா. நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக சில காட்சிகளில் நடித்து இருந்து ரசிகர்களிடம் பிரபலமானவர்.

பல்வேறு திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார் நடிகை அர்ச்சனா. ஆனால் வாலு திரைப்படம் இவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.

மட்டுமில்லாமல் சீரியலிலும் நடித்து வரும் இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருவிளையாடல் ஆரம்பம் கலகலப்பு வெள்ளைக்கார துரை ஸ்கெட்ச் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர். திடீரென சீரியல் பக்கம் திரும்பினார். இதுவரை தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, நீலி, அருந்ததி உள்ளிட்ட சீரியல் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிரபல இயக்குனர் மீது பகீர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருக்கிறார்.

அதாவது இவர் நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தில் அடுத்த நாள் படப்பிடிப்பில் செவிலியர் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதால் இவருக்கு செவிலியர்கள் அணியும் உடை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அதற்கு முன்பாகவே அர்ச்சனாவை அழைத்த இயக்குனர் உன்னுடைய உடையை முட்டிக்கு மேல் தூக்கி காட்டு நான் இந்த உடை எனக்கு பொருத்தமாக இருக்குமா..? அல்லது ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா..? என்று பார்க்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

பெரிய இயக்குனர் எதேச்சையாக கேட்கிறார் சரியாகத்தான் இருக்கும் என்று நடிகை அர்ச்சனாவும் முட்டிக்கு மேல் வரை தன்னுடைய உடையை தூக்கி காட்டி இருக்கிறார்.

ஆனால் அந்த இயக்குனர் இன்னும் கொஞ்சம் மேலே.. இன்னும் கொஞ்சம் மேலே தூக்கு என்று அர்ச்சனாவிடம் கேட்டிருக்கிறார். அப்பொழுது இயக்குனர் என்ன நோக்கத்திற்காக இப்படி கேட்கிறார் என்பதை புரிந்து கொண்ட நடிகை அர்ச்சனா சார் நான் நாளைக்கு வந்து இந்த ட்ரெஸ்-ஐ போட்டே காட்டுறேன் இதெல்லாம் வேண்டாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக கிளம்பி வந்து விட்டதாக கூறியிருக்கிறார்.

அதன்பிறகு அந்த படத்தில் நடிக்க நான் போகவே இல்லை. அந்த இயக்குனர் மீது நான் குற்றச்சாட்டு வைத்தால் என்னை எல்லோரும் திருப்பி கேள்வி கேட்பார்கள். அந்த இயக்குனர் அவ்வளவு உயரத்தில் இருக்கிறார்.. மட்டுமில்லாமல் என்னுடைய சினிமா வாழ்க்கையே பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.. இதனால் அந்த இயக்குனர் யார்..? என்று நான் வெளிப்படையாக கூற விரும்பவில்லை.. என்று கூறியிருக்கிறார் நடிகை அர்ச்சனா.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …