பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை அர்ச்சனா வாலு திரைப்படத்தில் கவுன்சிலரின் மனைவியாக நடித்த பெருவாரியான ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
தொடர்ந்து திரைப்படங்கள் சீரியல்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணைய பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவரிடம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த மோசமான அனுபவம் குறித்து ஏதேனும் கூற முடியுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அர்ச்சனா ஒரு முன்னணி இயக்குனர் இயக்கிய திரைப்படம். அந்த திரைப்படத்தில் நான் செவிலியராக நடித்துக் கொண்டிருந்தேன்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அதன் பிறகு எனக்கு செவிலியர் உடை கொடுக்கப்பட்டது. இயக்குனர் என்னை அவருடைய அறைக்கு அழைத்தார்.
நாளை நீங்கள் இந்த உடையை தான் உடுத்த வேண்டும் என்று கூறினார். இந்த உடை உங்களுக்கு சரியாக இருக்குமா..? என்று பார்க்க வேண்டும்.
உங்களுடைய உடையை முட்டிவரை தூக்குங்கள் என்று கூறினார். சரி சாதாரணமாக கேட்கிறார் என்று முட்டி வரை தூக்கி காட்டினேன். அதன் பிறகு இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றால் சரி என்று முட்டிக்கு மேல் உடையை தூக்கினேன்.
உடனே இன்னும் கொஞ்சம் மேலே தூக்குங்கள் என்றார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு புரிந்து விட்டது.
நாளைக்கு வந்து, அந்த உடையை அணிந்தே காட்டுகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி வந்து விட்டேன்.
அதன்பிறகு அடுத்த நாள் அந்த படப்பிடிப்புக்கு செல்லவே இல்லை. அந்த படத்திலிருந்து விலகி விட்டேன் என்று அர்ச்சனா மாரியப்பன் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் யாருப்பா அந்த இயக்குனர் என்று விவாதம் நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.