“என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க..” – தனது மகளிடம் கேட்ட ஆசாமிக்கு அர்ச்சனாவின் நெத்தியடி பதில்..!

90 கிட்ஸ் இயலுமான தொகுப்பாளினி அர்ச்சனா தொடர்ந்து சன் டிவியில் மாலை நேரங்களில் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் காமெடி நடிகர் சிட்டி பாபு உடன் சேர்ந்துகொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா.

இவர் சில சீரியல்களிலும் சினிமா படங்களிலும் கூட கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஏன்டா தலையில என்ன வைக்கல என்ற திரைப்படத்தில் யோகி பாபுவும் இவரும் சேர்ந்து கொண்டு செய்த டபுள் மீனிங் காமெடிகள் தற்போதும் இளசுகள் மத்தியில் பிரபலம்.

கணவனை ஏமாற்றும் மனைவி போன்றதொரு கதாபாத்திரத்தில் நகைச்சுவையாக நடித்து இருந்தார் நடிகை அர்ச்சனா தொலைக்காட்சி மட்டுமில்லாமல் இணைய ஊடகங்களிலும் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் இவர் பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார்.

சமீபகாலமாக இன்னும் பிரபலமாக இருக்கும் இவர் பாத்ரூம் டோர் என்ற ஒரு வீடியோவை போட்டு தன்னுடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் ஆக்கி கொண்டார்.

தொகுப்பாளினி அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் நேரலையில் உரையாடியபோது ஒரு ஆசாமி அர்ச்சனாவின் மகள் சராவிடம் “என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். தயவுசெய்து இதற்கு பதில் கொடுங்கள் என்னை தொங்க விடாதீர்கள்” என்று கேட்டிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்த அர்ச்சனாவின் மகள் சாரா தனது அம்மாவிடம் இதற்கான பதிலை சொல்ல சொன்னார். இந்த கேள்வியை படித்த அர்ச்சனா, “ஒரு பதினைந்து வருடம் கழித்து உங்களுடைய அப்பா அம்மாவை என்னிடம் வந்து பேச சொல்லுங்கள்” என்று கூலாக பதில் கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …