அர்ஜுன்-குஷ்பூ இடையே இருந்த தொடர்பு..! – அந்த விஷயத்தில் குஷ்பூ பெரிய தியாகி..! – புட்டு புட்டு வைத்த நடிகர்..!

நடிகை குஷ்பூ பிரபு நடிகர் அர்ஜுன் வீழ்ந்து கிடந்த போது உதவி அவரை பாதாளத்தில் இருந்து மீட்டெடுத்தார். எத்தனையோ நடிகைகள் இருக்கும் பொழுது நடிகை குஷ்பூ எதற்காக அர்ஜுனுக்கு உதவினார்.

இருவருக்குள்ளும் ஏற்பட்ட பழக்கம் என்ன…? என்ன தொடர்பு..? அர்ஜுனுக்காக நடிகை குஷ்பூ செய்த தியாகங்கள் என்ன..? போன்ற விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகை குஷ்பூ பல்வேறு கதாபாதிங்களில் நடித்திருந்தாலும், முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமானது நடிகர் அர்ஜுன் நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான கன்னட திரைப்படமான பிரேமக்னி என்ற திரைப்படத்தில் தான்.

இந்த திரைப்படத்தில் தான் நடிகை குஷ்பூ முதன்முறையாக ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகை குஷ்புவின் மார்க்கெட் கிடுகிடுவென எகிரியது. ஒரு கட்டத்தில் நடிகை குஷ்பூவிற்கு கோயில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் துணிந்தார்கள்.

அந்த அளவுக்கு பிரபலமான நடிகை குஷ்பூ தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் ரவுண்டு கட்டி அடித்தார். மறுபக்கம் நடிகர் அர்ஜுன் பல்வேறு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.

1990 ஆம் ஆண்டு மட்டும் நடிகர் அர்ஜுன் தமிழ் கன்னடம் என மொத்தம் எட்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த எட்டு திரைப்படங்களில் எதுவுமே அவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. தோல்வி படங்களாக அமைந்தன.

இதனால் நடிகர் அர்ஜுனனின் மார்க்கெட் அதள பாதாளத்தில் விழுந்தது. அப்படி இருந்த அவரை ஆபத்திலிருந்து மீட்டவர் நடிகை குஷ்பூ.

தன்னுடைய படத்தில் தன்னை முதன்முதலாக ஹீரோயினாக நடிக்க வைத்தவர் என்ற முறையில் ஒரு நெருக்கம் நடிகர் அர்ஜுனுக்கும் குஷ்பூக்கும் இடையே இருந்திருக்கிறது.

இவர்களுடைய நட்பு ரீதியான தொடர்பு இருந்திருக்கின்றது. நடிகர் அர்ஜுனின் மார்க்கெட் சரிந்து விட்டது. அந்த நேரத்தில் நடிகர் அர்ஜுனை வைத்து படத்தை இயக்க எந்த இயக்குனரும் முன் வரவில்லை.

இதனால் கொஞ்சம் துவண்டு தான் போனார் அர்ஜுன். இதனால், சொந்தமாக ஒரு படத்தை இயக்க முடிவு செய்தார் அர்ஜுன். இதற்காக பல்வேறு தயாரிப்பாளர்களை அணுகி இருக்கிறார். ஆனால், அர்ஜுனுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.

ஆனால், ஒரே ஒரு பைனான்சியர் மட்டும் உங்களுடைய மார்க்கெட் சரிந்து விட்டது. உங்களை நம்பி பணம் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள். நான் ஒரு ஆலோசனை சொல்கிறேன் கேளுங்கள்.

நடிகை குஷ்புவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் இருக்கிறது. அவரை இந்த படத்தில் நீங்கள் ஹீரோயின் ஆக்கினால் நான் படத்திற்கு பைனான்ஸ் செய்கிறேன். படத்திற்கும் ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கும் என கேட்டிருக்கிறார்.

இதை கேட்ட அர்ஜுன், ஒரு விதமான தயக்கத்துடன் நகை குஷ்பூவுடன் கால்ஷீட் கேட்டிருக்கிறார். ஏனென்றால் நடிகை குஷ்பூ அப்பொழுது கால் சீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியாக இருந்த ஒருவர்.

காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று கொண்டிருந்த நேரம் அது. ஆனால், நடிகர் அர்ஜுனின் திரைப்படம் என்பதால், நான் ஹீரோயினாக நடித்த முதல் திரைப்படம் அர்ஜுனன் படம் என்ற ஒரு பழக்கத்தினாலும் அவர்களுக்குள் இருந்த நட்பு ரீதியான தொடர்பினாலும் அர்ஜுனன் படத்தில் நடித்த சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

பகல் நேரங்களில் மட்டும் வேறு படங்களில் நடித்துவிட்டு.. இரவு ஓய்வு கூட எடுக்காமல் நேரங்களில் நடிகர் அர்ஜுனின் படத்தில் நடித்து கொடுத்துள்ளார். அப்படி உருவான படம் தான் சேவகன். நடிகர் அர்ஜுன் இயக்கி நடித்திருந்த முதல் திரைப்படம் சேவகன் தான் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …