“பிரம்மபுரீஸ்வரர் கோவில் திருச்சி..! – சிறப்புகளை பார்க்கலாமா?

படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு இந்த உலகத்தில் சொற்ப அளவே கோயில்கள் உள்ளது. அந்த வரிசையில் திருச்சியில் அமைந்திருக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது.

brahmapureeswarar-temple

 மேலும் இந்தக் கோயிலில் இவருக்கு உரிய வழிபாடு சிவனுக்கு நிகராக நடத்தப்படுவதாக பலரும் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த திருக்கோயிலின் சிறப்புகள் என்ன என்பதை பற்றி எந்த கட்டுரையில் விரிவாகவும் விளக்கமாகவும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

திருச்சி பிரம்மபுரீஸ்வரர் கோவில் சிறப்புகள்

இந்த வாழ்க்கையில் நாம் பிறந்து பல்வகையான இன்னல்களை சந்தித்து வரக்கூடிய வேளையிலே உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் நீங்கள் கட்டாயம் எந்த கோயிலுக்குப் போய் வாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு அதிசயத்தக்க மாற்றம் ஏற்படும்.

இந்த கோயிலானது திருச்சிக்கு அருகே இருக்கக்கூடிய திருப்பட்டூரில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிறு கிராமத்தில் இப்படி ஒரு கோயில் உள்ளது. அதுவும் இங்கு பிரம்மாவுக்கு இப்படிப்பட்ட வழிபாடுகள் நடக்கிறதா? என்ற ஆச்சிரியத்தை தூண்டும் அளவுக்கு இந்த கோவிலில் அற்புத ஆற்றல்கள் நிறைந்துள்ளது.

brahmapureeswarar-temple

இந்த உலகில் உயிரோடு இருக்கும் அத்தனை ஜீவராசிகளையும் படைக்க கூடிய ஆற்றல் பெற்ற பிரம்மனுக்கு தலைக்கனம் தலைக்கு ஏறியதால் சிவனையும், பெருமாளையும் அவமதித்ததாக புராணக் கதைகளில் கேள்வி பட்டு இருக்கிறோம்.

எனவேதான் இவருக்கு சொற்ப அளவில் பூலோகத்தில் கோயில்கள் உள்ளது. அந்த வரிசையில் இந்த கோயிலும் ஒன்று. இந்த கோவில் காலை 7:30 மணியிலிருந்து மதியம் 12 மணி வரையும் மாலை நாலு மதியிலிருந்து இரவு 8 மணி வரையும் திறந்து இருக்கும்.

பிரம்மன் எழுதிய தலை எழுத்தை மாற்ற வேண்டுமென்றால் பிரம்மா வீற்றிருக்கும் இந்த கோயிலுக்கு நீங்கள் விதி இருந்தால் மட்டும் தான் செல்ல முடியும் என்று கூறுகிறார்கள்.

brahmapureeswarar-temple

இந்தக் கோயிலில் பங்குனி மாதம் 3 நாட்களும் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும். அதே நேரத்தில் லிங்கத்தை தரிசிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.பேராசை கொண்ட யாரும் இதை தரிசிக்க முடியாது என்று கூறுகிறார்கள்.

இங்கு இருக்கக்கூடிய நந்தி சிலையானது தஞ்சை பெரிய கோவில் சிலைக்கு முந்தையது. நந்தி சிலையை தடவினால் நிஜமான நந்தியை தடவியது போல ஒரு உணர்வு உங்களுக்குள் ஏற்படும். அந்த அளவுக்கு இந்த சிலையை செதுக்கி இருக்கிறார்கள்.

நீங்களும் உங்கள் கஷ்டம் தீர திருச்சிக்கு அருகில் இருக்கும் எந்த பிரம்மாவின் கோயிலுக்கு சென்று வாருங்கள். கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் அதற்கு உறுதுணையாக பிரம்மபுரீஸ்வரர் இருப்பார்.