அருவி படத்தில் அடக்கமான பெண்ணாக நடித்து வந்த நடிகை அதிதி பாலன் தற்போது கவர்ச்சிக்கு மாறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அருவி என்ற லோ பட்ஜெட் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். வெறும் மூன்று கோடி பட்ஜெட்டில் உருவான அருவி திரைப்படம் கிட்டத்தட்ட முப்பது கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் நடிகை திரிஷாவின் தோழியாக சில காட்சிகளில் அதிதி பாலன் தோன்றியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அருவி என்ற படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹீரோயினாக அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பின் முதிர்ச்சியை ரசிகர்களின் கண்முன் கொண்டுவந்து நிறுத்தினார்.
Image Source : Instagram/officialaditibalanஅருவி படத்தில் அதிதி பாலனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. பலரும் நேர்மறையான விமர்சனங்களைப் இந்த படத்திற்கு கொடுத்தனர். அருவி படத்திற்காக ஏராளமான விருதுகளை வாரிக் குவித்த அதிதி பாலன் தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
Image Source : Instagram/officialaditibalanஆனால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய அருவி போன்ற திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து அதற்கான கதைகள் காத்திருந்த நடிகை அதிதி பாலன் தற்பொழுது எப்படியான கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் சரி கதையும் கதாபாத்திரமும் சரியாக இருந்தால் போதும் நிச்சயமாக நடிப்பேன் என்ற நிலைக்கு இறங்கி வந்துள்ளார்.
Image Source : Instagram/officialaditibalanமேலும் கவர்ச்சியாக நடிக்கவும் கிரீன் சிக்னல் கொடுத்து உள்ளார். இந்நிலையில் கவர்ச்சியான உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Image Source : Instagram/officialaditibalan
இதனை பார்த்த ரசிகர்கள் அருவி படத்தில் நடித்த அதிதி பாலனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.