“கேப்டன்” படம் ஆர்யா நடிப்பில் எப்படி?நூற்றுக்கு எத்தனை மார்க் கொடுக்கலாம்!

தமிழில் வித்தியாசமான திரைப்படங்களை இவர் இயக்குவதில் வல்லவர்.  கேப்டன் படத்தையும் அவர் தான் எடுத்திருக்கிறார்.மிகவும் யோசிக்க வேண்டாம். இவர் வேறு யாருமில்லை மிருதன்,டெடி போன்ற எதிர் பார்க்காத கதை அம்சம் கொண்ட படங்களை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் தான்  இந்த கேப்டன் படத்திலும்  தமிழ் திரை உலகத்தில் இதுவரை வெளி வராத கதையை கொடுத்து அனைவரையும் மிரள வைத்திருக்கிறார்.

 இந்த படத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கிறார் இவர் பல படங்களில் இளம்பெண்களின்  கவர்ந்த நாயகனாக வலம் வந்திருக்கிறார்.மேலும்  இந்தப்படத்தில் சிம்ரன், காவியா செட்டி, பரத்வாஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 ஏற்கனவே வித்தியாசமாக சிந்திப்பதில் திறமை வாய்ந்த சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்தை ஏலியன்களின்  சர்வைவல் படமாக படம் பிடித்திருப்பது தமிழ் திரையுலகில் மிகப் பெரிய ஒரு வித்தியாசமான படமாக இது இருக்கும் என்று அனைவராலும் பேசப்படுகிறது.

இப் படத்தில் கேப்டன் வெற்றிச்செல்வன் ஆக நடித்திருக்கும் ஆர்யா எப்படிப்பட்ட நிலையிலும் எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து வெற்றியை நிலைநாட்டக் கூடிய கேரக்டராக செய்திருக்கிறார். இவருக்கு ஒரு மிகப்பெரிய  வேலை கொடுக்கப்படுகிறது.

 அந்த வேலை  என்னவென்றால் இதுவரை யாருமே அந்த அடர்ந்த காட்டுக்குள் சென்றதில்லை.எனவே அந்த காட்டுக்குள் செல்லக்கூடிய ஆர்யாவின் குழுவானது ஒரு பிரிடேட்ரிடம்  மாட்டிக்கொள்கிறார்கள். இந்த பிரிடேட்ரிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்து வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதையின் கரு.

---- Advertisement ----

 இதுவரை காதல் காட்சிகளில் ஆர்யாவை பார்த்த நமக்கு இது போன்ற காட்சிகளில் அவரை பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கதையின் நாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி அவ்வப்போது கதை களத்துக்குள் வந்திருந்தாலும் அவர்கள் வரக்கூடிய இடங்கள் அனைத்திலும் மிக நன்றாக தனது திறமையை காட்டியிருக்கிறார்.

 1987இல் ஆங்கிலத்தில் வெளிவந்த பிரிடேட்டர் படத்தில்  இருந்த வேகம் மற்றும் விறுவிறுப்பும் இந்த படத்தில் சற்று கம்மியாக தான் உள்ளது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு படம் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று அனைவரும் கூறுகிறார்கள்.எனினும் ஒரு முறை போய் பார்க்கக்கூடிய அளவிற்கு எந்த படம் தரமாக இருக்கிறது.

---- Advertisement ----