கமல்ஹாசன் அப்படி செய்வார்ன்னு எதிர்பார்க்கல..! – பாபநாசம் நடிகை ஆஷா சரத் ஓப்பன் டாக்..!

நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆஷா சரத்.

அதனை தொடர்ந்து தூங்காவனம், பாகமதி, அன்பறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஃப்ரைடே என்ற மலையாள திரைப்படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஆஷா சரத் கேரள மாநிலம் பெரும்பாவூரில் பிறந்தவராவார்.

நடிகையாகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், பரதநாட்டிய கலைஞராகவும் அறியப்படும் இவர் பல்வேறு அரங்கேற்றங்களையும் நிகழ்த்தி இருக்கிறார். மேலும் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார்.

பாபநாசம் படத்தில் இவருடைய நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய வலுவாக இருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் என்ற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல்ஹாசனுடன் பாபநாசம் படத்தில் நடித்தீர்கள் உடனே தூங்காவனம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானீர்கள். இது எப்படி நடந்தது என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குபதில் அளித்த நடிகை ஆஷா சரத். இதனை நான் எதிர்பார்க்கவே இல்லை. கமல் சார் எனக்கு ஒரு குரு மாதிரி. எந்த காட்சியை எப்படி நடிக்க வேண்டும் என்ற சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களை கூட அவ்வளவு தெளிவாக புரியும் படி சொல்லுவார்.

ஒரு படத்தின் இயக்குனர் சொல்வதை விடவும் இவர் சொல்லக்கூடிய விஷயம் இன்னும் ஆத்மார்த்தமாக அந்த காட்சியை ஒரே டேக்கில் முடிக்கக்கூடிய அளவுக்கு தெளிவாக எடுத்து சொல்வார் கமல்ஹாசன்.

இவர் குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பாபநாசம் படத்தில் நடித்த போதுதான் அதனை நான் உணர்ந்தேன். நிஜமாகவே நடிப்பில் ஒரு குரு போன்றவர் நடிகர் கமலஹாசன்.

சிறு சிறு விஷயங்களைக்கூட அவ்வளவு துல்லியமாக கவனிப்பார் என்று கூறிய அவர் தூங்காவனம் படத்தில் எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்தது எதிர்பாராத ஒன்று.

அதிலும் ப்ரஸ் மீட்டில் ஆஷா சரத் தூங்காவனம் படத்தில் நடிக்கிறார் என்று அவர் கூறியதை நான் சுத்தமாக எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கனவு போல இருந்தது. அந்த படமும் எனக்கு சிறப்பான படமாக அமைந்தது என பேசி இருக்கிறார் நடிகை ஆஷா சரத்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …