பிரபல நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வந்தனர். அதே சமயம் நடிகை கீர்த்தி பாண்டியனின் நிறம் குறித்து நடிகர் அசோக் செல்வனின் நிறத்தோடு ஒப்பிட்டு உங்களுக்கு வேறு பெண்ணே கிடைக்கலையா..? இப்படி கருப்பாக இருக்கும் பெண்தான் உங்களுக்கு கிடைத்ததா..? என்று அசோக் செல்வனின் ரசிகைகள் பலரும் வயிறு எரிந்து கருத்துக்களை பதிவு செய்து வந்தனர்.
பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அசோக் செல்வன் என்றாலும் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது அவருக்கு கணிசமான பெண் ரசிகைகள் உருவானார்கள்.
அதன் பிறகு அவருடைய ஃபாலோவர்களாக மாறிய அவர்கள் திடீரென அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் திருமணம் செய்து கொண்டதும் கீர்த்தி பாண்டியன் நிறத்தையும் அவருடைய உடல் அமைப்பையும் கேலி செய்யும் விதமாக கருத்துக்களை பதிவிட்டு அசோக் செல்வனை சீண்டி வந்தனர்.
இந்நிலையில், தன்னுடைய மனைவி கீர்த்தி பாண்டியனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு உலகிலேயே மிக அழகான பெண்ணுடன் என்று தலைப்பிட்டு சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் அசோக் செல்வன்.
இதன் மூலம் தன்னுடைய மனைவியை நிறத்தையும் உடல் வாகையும் கலாய்த்த கிண்டல் செய்த கேலி செய்த ரசிகர்களுக்கு அசோக் செல்வன் பதிலடி கொடுத்திருக்கிறார் என்று சக இணையவாசிகள் பேசி வருகின்றனர்.
மறுபக்கம் உருவம் நிறம் ஆகியவற்றை ஒருவரின் அழகுடன் தொடர்புபடுத்தி பார்க்கும் மனப்பாங்கு சமீபகாலமாக குறைந்து வருகிறது. ஆனால், இன்னும் கூட சிலர் நிறத்தையும் உடலமைப்பையும் அழகு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.