நீச்சல் உடையில் நடிகை அசின்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

நடிகை அசின் நீச்சல் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முன்பு தமிழ் சினிமாவில் நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர்.

இடையில் பிரபல தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை அசின் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் உள்ளம் கேட்குமே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அசினுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் நடித்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

அதைத்தொடர்ந்து கஜினி, போக்கிரி, வரலாறு, தசாவதாரம் என தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் உடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக உயர்ந்தார் நடிகை அசின்.

இவர் தொட்டதெல்லாம் ஹிட்டு என்ற நிலை ஒருகாலத்தில் சினிமாவில் இருந்தது அதன் பிறகு இந்தி சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தார் அம்மணி. அந்த வகையில், பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் விருந்தில் கலந்து கொண்ட நடிகை அசினுக்கு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் சர்மாவுடன் நட்பு ஏற்பட்டது.

அந்த நட்பு காதலாக மாறி அவரையே திருமணம் செய்து கொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் நடிகை அசின். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்ட நடிகை அசினின் சமீபத்திய புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. நீச்சலுடையில் இருக்கும் நடிகை அசின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.