நடிகை அசின் எடுத்த அதிரடி முடிவு..! – ஷாக் ஆகிப்போன ரசிகர்கள்..! – என்ன சொல்றீங்க.?

 

ஏன்னோ… தெரியவில்லை நடிகை அசினுக்கு மீண்டும் சினிமா இண்டஸ்ட்ரியில் ஒரு மறு என்ட்ரி கொடுக்க வேண்டும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறது போல.

பொதுவாக திரையுலகில் பெண்களுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு தான் அதிகமாக வாய்ப்பு இருக்கும். அந்த மவுஸ் திருமணத்திற்குப் பின்னால் குறைந்துவிடும். கதாநாயகியாக நடித்த இவர்களை அம்மா, அக்கா போன்ற வேடங்களில் மட்டுமே நடிக்க வைத்து அழகு பார்ப்பார்கள்.

அதில் விதி விலக்காக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் சமந்தா தான் திருமணத்திற்கு பின் இவர்கள் காட்டில் மழை பெய்து கொண்டிருக்கிறது.

இதில் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பின்னால் இவர் சினிமாவில் அதிக கவனம் செலுத்துவதும் காரணத்தாலோ என்னவோ அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.

 தமிழ்,தெலுங்கு மலையாளம் மற்றும் பாலிவுட் படங்களிலும் சக்கைபோடு போட்டு நடித்த  நடிகை அசின் இவரை உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். விஜயுடன் போக்கிரி, சிவகாசி காவலன் போன்ற படங்களில் நடித்த இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து  எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் நெஞ்சங்களில் குடிகொண்டார்.

பின்னர் இவர் 2016 ஆம் ஆண்டு  தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இதன் பின் தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது மீண்டும் அசின் திரைப்படங்களில் நடிக்க விருப்பத்தோடு இருக்கிறாராம்.

அதற்கான பச்சைக் கொடியை அவரது கணவரும் காட்டி விட்டதால் மீண்டும் இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து ஒரு கலக்கு கலக்குவார் என சினிமா இண்டஸ்ட்ரியில் உள்ள அனைவரும் கூறுகிறார்கள். மேலும் அதற்காக சிறந்த கதைகளை தேர்வு செய்ததற்காக அவர் கதை கேட்டு வருகிறார்.

யாருக்கு தெரியும் திருமணத்துக்கு பின்னர் ஜோதிகாவிற்கு சூர்யா கொடுத்த ஆதரவால் அவர் ஒரு மிகப்பெரிய ஹிட்டை கொடுத்தார். அது போல இவருக்கும் இவர் கணவர் ஆதரவு இருப்பதால் மீண்டும் ஒரு ரவுண்ட் வந்து கலக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நடிகை அசின் மீண்டும் சினிமாவில் நடிக்க இருக்கும் தகவல் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …