அப்படி நெனச்சி கூட பாக்கல.. மாரிமுத்து மறைவுக்கு பிறகு.. ஜோதிடரின் Emotional பேச்சு..!

காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இருக்கிறது நடிகர் மாரிமுத்துவின் மரணமும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கலந்து கொண்ட ஒரு விவாத நிகழ்ச்சியும்.

பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள் நேற்று(செப்.8) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து இவருடைய மரணத்திற்கு முன்பே இவருடைய மரண செய்தி பல வகைகளில் இவருக்கு தெரியப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இவர் அதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார் என்று அந்த விவாத நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், அவர் நடித்த சீரியல் காட்சிகளை அடிப்படையாக கொண்டு பல்வேறு தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த விவாத நிகழ்ச்சி என்னவென்றால் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் இடையேயான விவாதம்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் மாரிமுத்து ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்ற பக்கத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒரு விவாத நிகழ்ச்சியாக இல்லாமல் சண்டைக்களமாக மாறிவிட்டது என்று தான் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது தெரிகிறது.

நடிகர் மாரிமுத்து இந்தியா பின்தங்கி இருப்பதற்கு ஜோதிடர்கள் தான் காரணம். இவர்களெல்லாம் மன்னிக்க முடியாத குற்றவாளிகள் என்று கடுமையாக ஜோதிடர்களை சாடியிருந்தார்.

இதனை கேட்ட ஒரு ஜோதிடர் நீங்கள் வெறும் நடிகர்.. நாங்க யார் என்று உங்களுக்கு தெரியுமா..? என்று கேள்வி எழுப்பினார். நான் கடவுளையே நம்பாதவன் உக்காருயா என்று ஜோதிடரை ஒருமையில் பேசி இருந்தார் நடிகர் மாரிமுத்து.

அந்த நேரத்தில் உங்களுடைய பிறந்த தேதியை சொல்லுங்கள் உங்களுக்கு நடக்க இருப்பதை நாங்கள் சொல்கிறோம் என்று சில ஜோதிடர்கள் சவால் விடுத்தனர். அவரும் கூறினார்.

அப்போது உங்களுடைய உங்களோட வயிற்றுப் பகுதிக்கு மேல் ஒரு பிரச்சனை இருக்கிறது. உண்மையா..? என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. இடுப்புக்கு மேல் இதயம் தான் இருக்கிறது. அது நல்லா ஓடிக்கிட்டு இருக்கு என்று கூறினார்.

உண்மை என்னவென்றால் மாரிமுத்து ஏற்கனவே இதய பிரச்சினை இருப்பதன் காரணமாக தன்னுடைய இதயத்தில் இரண்டு ஸ்டெண்ட் வைத்திருக்கிறார். இதனை புரிந்து கொண்டாவது கூடுமானவரை உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நமக்கு ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று மாரிமுத்து அவர்கள் பரிசோதனை செய்திருக்கலாம் என்று பலரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

மறுபக்கம், ஜோதிடர்கள் சாபம் தான் இன்று மாரிமுத்து நம்மிடம் இல்லை என்ற ரேஞ்சுக்கு மிகவும் மோசமான முறையில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரபரத்து கொண்டிருகின்றது.

இந்த தகவல்களை பார்ப்பதற்கு ஜீரணிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன. இதை தொடர்ந்து மாரிமுத்துவின் அந்த விவாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர் ஒருவர் பிரபல இணைய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது, மாரிமுத்து இறந்து விட்டார் என்பதை நான் இப்போது வரை நம்பவில்லை. அன்று நடந்தது ஒரு விவாத நிகழ்ச்சி. அதில் அவர் பேசியது தவறு சரி இதெல்லாம் சாதாரண விஷயம்.

ஆனால், அவர் மரணம் அடைந்த பிறகு இந்த விஷயத்தை பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் குறிப்பாக இந்த வலைதள பக்கங்களில் இதனை ஒரு பேசு பொருளாக மாற்றி பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

யூ-ட்யூபை திறந்தாலே இது சார்ந்த செய்தி தான் வருகிறது. ஒருவர் மரணத்தில் கூட இப்படி ஆதாயம் தேட வேண்டுமா..? மாரிமுத்து ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்.. கடவுள் நம்பிக்கை இல்லாதவர் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

அவர் ஒரு நடிகர், ஒரு மனிதர் அவர் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வரவில்லை என்றால் அந்த குடும்பம் படும் வேதனை என்ன..? இது எல்லாம் எதுவுமே கவனத்தில் கொள்ளாமல் இதனை ஒரு பேசு பொருளாக மாற்றுவதிலேயே வலைதளங்களில் மிக நிறைய பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இது தவறான போக்கு. மனிதனாக பிறந்த எல்லோரும் ஒருநாள் இருக்கத்தான் போகிறோம். நானும் ஒரு நாள் மரணிக்கத்தான் போகிறேன். இதனை இந்த ஜோதிட விவாதத்தில் கலந்து கொண்டு நாள் தான் அவர் இறந்துவிட்டார். அவர் இறந்ததற்கு காரணமே ஜோதிடர்கள் தான் என்பது போல வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் சண்டை போட்டோம்.. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம்.. ஆனால், அவர் மரணிக்க வேண்டும் என நினைத்து கூட பாக்கல.. இணையத்தில் இது போன்ற தகவல்கள் பரவுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்ற தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

எங்கள பாத்தா முட்டாளா தெரியுதா..? – லியோ தயாரிப்பு நிறுவனத்திடம் சவுக்கு சங்கர் கேள்வி..!

சவுக்கு சங்கர் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் …