ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி தான் அனைத்து விதமான பண்டிகைகளையும் அழைத்து வரக்கூடிய மாதமாக விளங்குகிறது என்று சொன்னால் மிகை ஆகாது.
இந்த வகையில் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை என ஆடியிலே வருகின்ற அத்தனை நாட்களும் விசேஷமான நாட்களாக தான் கருதப்படுகிறது. இதில் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆடி அமாவாசை நாளில்..
பொதுவாகவே மாதம் தோறும் வருகின்ற அமாவாசை அன்று காகத்திற்கு சாதம் படைப்பதை பல வீடுகளில் நீங்கள் பார்த்திருக்கலாம். அது மட்டுமல்லாமல் தினந்தோறும் காகத்திற்கு உணவு அளித்துவிட்டு உண்ணும் வீடுகள் இன்றும் பல உண்டு.
அந்த வகையில் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படும் ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படுகிறது.மேலும் இந்த காகம் ஆனது சனீஸ்வர பகவானின் வாகனம் என்பதால் காகத்தை யாரும் வீட்டில் கோவிலிலோ வளர்ப்பது கிடையாது.
அத்துடன் காகத்திற்கு கொடுக்கப்படுகின்ற உணவானது நமக்கு சம்பந்தம் இல்லாத ஒரு உயிரினத்துக்கு அளிக்கப்படக்கூடியது என்பதால் தானத்தில் இடம் பிடித்திருக்கும் இந்த நிகழ்வு மிகச்சிறந்த தானமாக கருதப்படுகிறது.
காகத்திற்கு ஏன் உணவு வைக்க வேண்டும்..
அதுமட்டுமல்லாமல் நம்முடைய முன்னோர்கள் காக ரூபத்தில் தான் பூமியை நோக்கி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உணவளிப்பது குடும்பத்தின் நன்மைக்கு உகந்தது என்று சொல்லி இருக்கிறார்கள்.
அந்த வகையில் ஆடி அமாவாசை அன்று காகத்திற்கு உணவு வைப்பது மூலம் நமது முன்னோர்களே இந்த உணவை சாப்பிடுவதாக நம்பிக்கை தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
காகத்தை பொறுத்த வரை தனக்கு கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்ணக் கூடிய மிகச்சிறந்த குணம் படைத்திருப்பதால் எல்லோரும் முடிந்த வரை ஒரு கைப்பிடி உணவையாவது காகத்திற்கு தினமும் படைப்பது பிதுர்களின் சாபம் ஏற்படாமல் இருப்பதற்கு வழி செய்யும்.
இது தெரிஞ்சா முன்னேற்றம் நிச்சயம்..
எனவே குடும்பம் செல்வ செழிப்பில் திழைக்கவும், வீட்டில் மகிழ்ச்சி பொங்கவும், அடுத்தடுத்து வம்ச விருத்தி ஆகவும் ஆடி அமாவாசை அன்று குளித்துவிட்டு விரதம் இருந்து உங்கள் கையால் உணவினை சமைத்து காகத்திற்கு வைக்கும் போது மேற்கூறிய புண்ணியம் உங்களுக்கு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் இல்லத்தில் சுபிட்சம் நிலவும்.
ஆடி அமாவாசை அன்று வாழைக்காய், பாகற்காய், சேம்பு, சேப்பங்கிழங்கு, வாழைத்தண்டு, அவரைக்காய் போன்ற காய்களை கட்டாயம் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.
அப்படி நீங்கள் உணவு படைக்கும் போது அந்த உணவோடு சிறிதளவு எள்ளினை வைத்து படைப்பின் மூலம் கட்டாயம் உங்கள் முன்னோர்கள் நீங்கள் அளித்த உணவை காக ரூபத்தில் உண்டு உங்களுக்கு ஆசீர்வாதம் கொடுப்பார்கள்.
எனவே மாத அமாவாசை தவிர இது போன்று வரும் புண்ணிய காலங்களில் நீங்கள் உங்கள் முன்னோர்களை வேண்டி அவர்களுக்கு உணவளித்து அவர்களை திருப்திப்படுத்துவது என்பது முக்கியமான ஒன்றாகும். எனவே மறவாமல் செய்து குடும்ப சுபிட்சத்தை மேம்படுத்துங்கள்.