தளபதி கேமியோ பண்ணல.. இவர் தான் கேமியோவாம்.. – ஜவான் ரிலீஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான் இன்று உலகம் முழுதும் இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது. முன்னதாக இந்த திரைப்படத்தில் பல்வேறு பிரபல நடிகர்கள் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் படம் வெளியான பிறகு தான் தெரிகிறது. அப்படி யாரும் நடிக்கவில்லை என்று. படம் வெளியான சில நாட்களுக்கு முன்பு வரை குறிப்பாக சொல்லப்போனால் கடந்த ஒரு வாரமாக நடிகர் விஜய் ஜவான் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றும் சில நிமிட காட்சிகளில் தோன்றுவார் என்றும் தகவல்கள் இணையத்தில் வைரலானது.

இது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், படம் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் விஜய் நடித்து வந்த இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தெரிய வந்திருக்கிறது.

மேலும் இயக்குனர் அட்லி, நடிகர் ஷாருக்கானுடன் பாடல் ஒன்றில் சேர்ந்து ஆட்டம் போட்டு இருக்கிறார். அப்படி என்றால் விஜய் கேமியாவில் இல்லை அட்லி தான் கேமியோ பண்ணியிருக்கார் நடித்திருக்கிறார் என்று கலாய்கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …