நம்பவச்சி ஏமாத்திட்டார்.. அட்லி குறித்து நடிகை பிரியாமணி பரபரப்பு பேட்டி..!

நடிகை பிரியாமணி ஜவான் திரைப்படத்தில் சிறை கைதியாகவும் போராளி பெண்ணாகவும் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்த சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது பேசியிருந்தார்.

அதில் பேசிய நடிகை பிரியாமணி ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியானது.

அது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்த செய்தியை நாங்களும் இன்டர்நெட் மூலமாக தான் தெரிந்து கொண்டோம்.

இயக்குனர் அட்லி எங்களிடம் எதுவும் கூறவில்லை. இதனை தொடர்ந்து அட்லீயிடம் சென்று இந்த திரைப்படத்தில் விஜய் நடிக்கிறாரா..? என்று கேட்டதற்கு நடிக்க வைத்து விடலாம் என்று சிரித்து சிரித்தபடியே கூறினார்.

விஜய் சார் நடிப்பதாக இருந்தால் அவருடன் எனக்கும் ஒரு சின்ன காட்சியை வைத்து விடுங்கள் என்று கேட்டேன் அவ்வளவுதானே வச்சிடுவோம் என்று கூறினார்.ஆனால், கடைசி வரை என்னுடன் விஜய் நடிக்கவே இல்லை.. நம்ப வச்சி ஏமாத்திட்டார் அட்லி.

படம் சார்ந்தது எதை கேட்டாலும் ஆம், இல்லை என்று எந்த பதிலும் வராது. பாத்துக்கலாம் .. பண்ணிடலாம்.. வச்சிடலாம்.. பாக்கலாம்.. இதுபோலத்தான் சிரித்துக் கொண்டே அந்த கேள்விக்கு பதில் கூறுவார்.

ஆனால், படம் ரிலீஸ் ஆகும் வரை நடிகர் விஜய் இந்த படத்தில் நடிக்கிறாரா..? இல்லையா..? அல்லு அர்ஜுன் நடிக்கிறாரா..? இல்லையா…? என்ற விவரமும் எங்களுக்கு தெரியாது என கூறியிருக்கிறார் நடிகை பிரியாமணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …