ஷூட்டிங் கேன்சல் ஆயிடுச்சு… விஜய் சேதுபதியின் ஆட்டத்தை அடக்கிய அட்லீ இப்படியா நடக்கும்!

ராஜா ராணி படத்தின் மூலம் மிகச் சிறந்த இயக்குனராக தமிழில் போற்றப்படுபவர் அட்லீ. இவர் தமிழில் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தை தந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

 இப்போது பாலிவுட் படத்தை இயக்கி வரும் இவரின் படத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிக்கிறார். பாலிவுட் திரைப்படங்களில் கிங்கான் என்று அழைக்கப்படும் ஷாருக்கானுடன்  ஜவான் படப்பிடிப்பு வேலைகளை ஈடுபட்டிருக்கும் அட்லீ தற்போது  மும்பை மற்றும் கோவாவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு சென்னை வந்து இருக்கிறார்கள்.

ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். ராஜா ராணி பிகிலுக்குப் பிறகு நயன்தாரா அட்லீ இயக்கும் இந்த படத்தில் இணைந்து நடிக்கிறார்.

மேலும் பேட்டை ,மாஸ்டர், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கேரக்டரை செய்த விஜய் சேதுபதி இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். முதல் முறையாக இவர் அட்லீயின் இயக்கத்தில் இணைகிறார்.

 இந்நிலையில் இவரது முதற்கட்டப் படப்பிடிப்பின் போது விஜயசேதுபதியிடம் அட்லீயின் உதவி இயக்குனர் ஸ்கிரிப்டை சொல்லி இருக்கிறார். அந்த ஸ்கிரிப்டில்  சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அவர் சொல்ல அதனை அப்படியே அட்லீயிடம் உதவி இயக்குனரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அட்லீ அப்படியே இருக்கட்டும் அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்று விஜயசேதுபதிக்கு  எதிராகக்  கூறிவிட்டார்.

 இதை அடுத்து கடும் கோபம் கொண்ட விஜயசேதுபதி அந்த ஸ்கிரிப்ட்டை கிழித்து எறிந்து விட்டார். இது மிகப் பெரிய பிரச்சனையாகி 600 பேர் கலந்து கொண்டிருந்த படப்பிடிப்பு பாதியிலேயே  நின்று விட்டது.

இப்படத்திற்கான படப்பிடிப்பு  துவங்கியதில் இருந்தே அட்லீக்கு சிக்கல்கள் தான். கொரோனாவில் படப்பிடிப்பு தாமதமானது அது முடிந்ததும் நயன்தாராவின் திருமணம் முடிந்து சில நாட்கள் கழித்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து இயற்கை சீற்றங்களால் மும்பை பாதிக்கப்பட்ட போது அங்கு படம் எடுப்பதில் பிரச்சனை இருந்தது. தற்போது விஜய் சேதுபதியால் கிளம்பியிருக்கும் இந்த பிரச்சனையால் ஜவான் படப்பிடிப்பு இனி எப்படி தொடரும் என்ற கேள்வியோடு அட்லி இருக்கிறார்.

 எனினும் விஜயசேதுபதி ஆடிய ஆட்டத்தை ஆடி அடங்கி இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …