என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..

என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..

தமிழில் பிரபலமான பழம்பெரும் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் சுருளிராஜன். இப்போதை விடவும் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்தது.

இப்போதெல்லாம் இருக்கும் நகைச்சுவை நடிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அதிலும் பிரபலமான நடிகர்கள் வெகுசிலர்தான் ஆனால் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தனர்.

புரளியை கிளப்பிய பயில்வான்

நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், தங்கவேலு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு காமெடிக்கு அப்போது முக்கியத்துவம் இருந்தது.

என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..

நாடகத்துறையாக இருந்த காலகட்டத்தில் இருந்து சினிமா காமெடிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறது. அதனாலேயே கதாநாயகனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவுக்கான முக்கியத்துவம் அப்பொழுது காமெடி நடிகருக்கும் இருந்து வந்தது.

சுருளிராஜனை பொறுத்தவரை அவர் தனிப்பட்ட நகைச்சுவை திறன் கொண்ட ஒரு நடிகர் ஆவார். அவர் செய்யும் நகைச்சுவைகளை அவரைப் போலவே இன்னொரு நடிகரால் செய்ய முடியாது. இதுதான் சுருளிராஜனின் சிறப்பாக இருந்தது.

என் புருஷனை பத்தி என்ன தெரியும்

அவர் பேசும் விதமும் அவரது உடல் மொழியும் வேறு நடிகர்களுக்கு வராது இதேபோல நாகேஷ் தனக்கென ஒரு உடல் மொழியை கொண்டிருந்தார் ஆனால் நாகேஷ் கூட அவருக்கு என்று ஒரு பேசும் முறையை வைத்திருக்கவில்லை.

ஆனால் சுருளிராஜன் அப்படி ஒரு முறையை வைத்திருந்தார் தொடர்ந்து அவருக்கு அதனாலயே படங்களில் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன. ரஜினிகாந்த் வளர்ந்து வரும் காலகட்டம் வரையிலுமே சுருளிராஜன் திரைத்துறையில் இருந்து வந்தார்.

என் புருஷனை பத்தி என்ன தெரியும் உங்களுக்கு.. புரளியை கிளப்பிய பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி!..

இந்த நிலையில் 1980 இல் சுருளிராஜன் காலமானார் தமிழ் சினிமாவிலேயே ஒரே வருடத்தில் 50க்கும் அதிகமான திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்த ஒரே நடிகர் சுருளிராஜன் மட்டும் தான். அந்த அளவிற்கு பிரபலமான நடிகராக அவர் இருந்து வந்தார்.

பதிலடி கொடுத்த சுருளிராஜன் மனைவி

ஆனால் பிறகு சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்கள் வர ஆரம்பித்த பிறகு சுருளிராஜன் அவ்வளவாக தெரியாமல் போய்விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் சுருளிராஜன் பற்றி ஒரு பேட்டியில் பேசிய பயில்வான் ரங்கநாதன் அதிகமாக மது அருந்தியதால்தான் சுருளிராஜன் இறந்தார் என்று கூறுகிறார்.

அவரிடம் பட வாய்ப்புகள் கேட்க வரும் தயாரிப்பாளர்கள் கூட அவருக்கு வெளிநாட்டு மதுவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து தான் வாய்ப்புகளை பெற்றனர்.

இப்படியெல்லாம் சுருளிராஜன் செய்த காரணத்தினால் அவரது குடும்பம் இப்பொழுது கஷ்டத்தில் இருக்கிறது என்று கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். இந்த நிலையில் இதனால் கடுப்பான சுருளிராஜனின் மனைவியான முத்துலட்சுமி, என் கணவர் எப்படி இறந்தார் என்று உங்களுக்கு எப்படி தெரியும்.

அவர் மது அருந்தியதால் இழந்தார் என்று சொல்வதெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. நீங்கள் என்ன நேரில் இருந்து பார்த்தீர்களா சமூக வலைதளங்களில் அதிக வரவேற்பை பெற வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த செய்தி தான் இப்பொழுது பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.