ஜெயம் ரவி திடீர் Divorce ஏன்..? இதுவரை வெளியாகாத அதிர்ச்சி தகவல்கள்..! புட்டு புட்டு வைத்த பிரபல நடிகர்..!

தமிழின் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த விஷயங்கள்தான் சமீபகாலமாக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவிக்கும்  அவருது மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்கள் இருவரும் பிரிய போவதாகவும் இணையத்தில் நிறைய செய்திகள் வலம் வந்து கொண்டிருந்தன.

அடிக்கடி ஆர்த்தியும் ஜெயம் ரவியும் சேர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிடுவது உண்டு. ஆனால் கடந்த சில காலங்களாக அவர்கள் இணைந்து எந்த புகைப்படமும் வெளியிடவில்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.

விவாகரத்து பிரச்சனை:

ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளிவரவில்லை. ஆர்த்தி மற்றும் ஜெயம் ரவியின் விவாகரத்திற்கு காரணமாக இரண்டு விஷயங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று கார்த்தியின் தாய்தான் ஜெயம் ரவியின் நிறைய திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை. அவர் நடித்த படத்திலேயே பொன்னியின் செல்வன் திரைப்படம்தான் நல்ல வெற்றியை கொடுத்தது.

ஆனால் அந்த திரைப்படம் அவரது மாமியார் இயக்கி தயாரித்த திரைப்படம் கிடையாது. இதனால் அதிக தோல்வியை அவரது படம் கண்டதால் இதன் காரணமாக இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

உண்மையை கூறிய விமர்சகர்:

அதே சமயம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த பொழுது அவருக்கும் வேறு ஒரு நடிகைக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது அவரது மனைவிக்கு தெரிந்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சிலர் கூறும் பொழுது இது குறித்த விவாகரத்து பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுவிட்டது என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் இதுகுறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது ஜெயம் ரவியின் மாமியாரான சுஜாதா விஜயகுமார் நிறைய சின்னத்திரை சீரியல்களை தயாரித்து இருக்கிறார் தயாரிப்பாளராக அவர் கொஞ்சம் கண்டிப்பான ஆளாக இருந்து வருகிறார்.

அதனால் அவரை பிடிக்காத யாரோதான் இப்படியான ஒரு வதந்தியை பரப்பியிருக்கின்றனர். மத்தபடி ஜெயம் ரவியும் ஆர்த்தியும் நல்ல உறவு முறையில் இருக்கின்றனர். அவர்களுக்குள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அவர்கள் விவாகரத்து செய்ய போவதும் இல்லை என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

---- Advertisement ----

Check Also

பிரியா பவானி ஷங்கர் ரகசிய திருமணம்..! கலங்கி நின்ற நடிகர்..! போட்டு உடைத்த பிரபலம்..!

சின்ன திரையில் அறிமுகமாகி அதன் மூலமாக வெள்ளித்திரையில் பிரபலமாகி வரும் ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரியா பவானி …