தலை வழுக்கை விழ முக்கியமான காரணங்கள்.

இன்றைய  இளைய தலைமுறையினருக்கு இளமையிலேயே தலையில் வழுக்கை விழுவது அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 20 வயதிலேயே ஆண்களுக்கு முடி உதிர்வு அதிகரித்து தலையில் வழுக்கை விழ ஆரம்பிக்கிறது . 

தற்போது பல ஆண்களுக்கு திருமணம் என வரும்போது வழுக்கை ஒரு பிரச்சினையாகவும் உள்ளது. வழுக்கை விழவும், முடி உதிர்வுக்கு என்னென்ன சம்பந்தம், காரணம் என்பதை பற்றி இனி பார்ப்போம்.

வழுக்கை விழ காரணம்:

வழுக்கை ஏற்பட  முடி உதிர்வு மற்றும் பாரம்பரியமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதிலும் இன்றைய உலகில் மன அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தீய பழக்கவழக்கங்களால் முடி உதிர்வு அதிகரிப்பதோடு குறிப்பிட்ட இடத்தில் முடி வளராமல் வழுக்கை ஏற்படுகிறது. 

மருந்துகள் அல்லது நோய்களால் பாதிக்கப்பட்ட ஆண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் முடி உதிர்வை அதிகரிக்கும். மேலும் டி ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரித்து விட்டால் அந்த இடத்தில் உள்ள முடி விரைவில் உதிர்ந்து வழுக்கை ஆகிவிடும். இரவில் நிம்மதியாக தூங்காமல் இருக்கும் ஆண்களுக்கும் முடி உதிர்தல் அதிகரிக்கும்.  அத்தோடு கெல்மேட் அணியும் ஆண்களுக்கும் முடி உதிர்தல் மிக விரைவாக ஏற்படும். 

பெண்களுக்குமா? வழுக்கை…

இந்த நிலை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் தற்போது காணப்படுவது மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகும் விசயமாகும். குறிப்பாக மன அழுத்தம் அதிகரிப்பதால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அதில் ஒன்று தான் இந்த உச்சந்தலையில் உள்ள முடி உதிர்வது.

மன அழுத்தத்தால் அதிகம் பெண்கள் பாதிக்கப்படுவதால் மன அழுத்தத்தைத் தூண்டும் சில காரணிகள் தலைமுடி உதிர்வுக்கு மிக முக்கியமான காரணியாக உள்ளது என அழகுக்கலை வல்லுனர்கள் கூறுகிறார்கள். கூடவே மோசமான உணவு பழக்க வழக்கத்தால் கூட இந்த முடிவுதிர்வுகள் ஏற்படலாம்.  

முக்கியமாக புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் குறைபாட்டால் மயிர்க்கால்களுக்கு சத்துக்கள் கிடைக்காமல்  முடி உதிர்தல் அதிகரித்து நாளடைவில் வழுக்கை  ஏற்பட காரணமாக உள்ளது. 

முடி உதிர்வை தடுக்க செய்ய வேண்டியவை:

நல்ல ஊட்டச் சத்துக்கள் உள்ள உணவுகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக புரோட்டீன் வைட்டமின் பி3 பி5 மற்றும் ஈ, ஜிங்க், இரும்புச்சத்து ,மக்னீசியம் நிறைந்த உணவுப் பொருட்களை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல் இரவில் 7 முதல் 8 மணி நேரம் உறங்கவேண்டும். தண்ணீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அருந்த வேண்டும். அப்படி செய்வதால் மயிர்கால்களை வறட்சியடையாமல் ஆரோக்கியமாக இருக்கும். 

முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள்:

பால் ,பாதாம் ,பசலைக் கீரை, ப்ராக்கோலி, நவதானியங்கள் ,மீன் சோயா ,முட்டை ,கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் முடி வளர்ச்சி ஏற்படும். தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வந்தால் முடி உதிரும் ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் தூண்டுதலைத் தடுக்கும்.

 

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …