அடடா… படம் வெளிவருவதற்கு முன்பே இப்படி ஒரு சோக நிகழ்வா- கவலையில் திரைத்துறையினர்.

பொன்னியின் செல்வன் படத்தில் வரக்கூடிய பொன்னி நதி பாடலை பாடியவர் பிரபல பாடகர் பம்பா பாக்யா. தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி பாடகராக இருக்கும் இவர் இன்று மரணம் அடைந்து இருப்பது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முன்னணி நடிகர்களாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எந்திரன் படத்திலும் தளபதி விஜய் அவர்களுக்கு சர்க்கார் படத்தில் இவர் பாடல் பாடி இருப்பது அனைவரும் அறிந்ததே.

மிகப்பெரிய வரலாற்று காவியமான கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தை  மணிரத்தினம் இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே. மிகப்பெரிய பொருட்செலவில் பிரபலமான பல நடிகர்கள் பல விதமான வரலாற்று வேடங்களை ஏற்று இப்படத்தில் நடித்து  உள்ளார்கள்.

படம் மக்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதோடு  தமிழ் மன்னர்களின் வரலாற்றைப் பற்றி மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஏன் எதிர்கால தலைமுறை க்கும் கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இப்படமானது வரக்கூடிய  செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்காக இதில் நடித்த நடிகர்களே காத்திருக்கிறார்கள் என்று சொல்லாம்.

அதுமட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த சிம்டாங்காரன், காலமே காலமே என போன்ற பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த பாடல்களை பாடி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர்.

சாகுற வயசா இது, என்று கேட்க கூடிய நிலையில் ரசிகர்கள் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இவருக்கு வயது நாற்பத்தி ஒன்பது மட்டுமே. ஏ ஆர் ரகுமான் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட சிறந்த பாடகரான இவர் ஏ ஆர் ரகுமானின் இசையில் நிறைய பாடி இருக்கிறார். 

 அதிகமாக திறமை இருக்கும் அனைவரும் அதிக காலம் வாழ்வதில்லை. இது ஏன் என்று எனக்கும் புரியவில்லை. இன்னும் சில காலம் இவர் இருந்திருந்தால் இவர் இசையில் பலர் வாழ்ந்திருப்பார்கள். எனினும் இவர் இல்லை என்றாலும் இவர் விட்டுச் சென்ற இசை அனைவரின் காதுகளிலும் இவர் பாடிய பாடல்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

கவர்ச்சிக்கு நோ சொல்லும் சாய் பல்லவியா இது..? நம்பவே முடியலையே..

இந்த பூனையும் பால் குடிக்குமா என்று கேட்கும் நிலையில்தான், சில நடிகைகளின் நடவடிக்கை இருக்கும். கவர்ச்சியாக நடிப்பதா, அதெல்லாம் என்னால் …