வாழைப்பூ பொறியியல்.

இன்று உள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வயிற்று கோளாறுகள் ஏற்படுவது இயல்பாகிவிட்டது வயிற்று கோளாறுகளை நீக்கி வாழை மரத்திற்கு உண்டு இருக்கக்கூடிய வாழைப்பூ வாழைத்தண்டு வாழைப்பழம் தடுக்கக்கூடிய சக்தி படைத்தது.

அப்படிப்பட்ட வாழைமரத்தில் இருந்து எடுக்கப்பட கூடிய உழைப்பு மிகவும் மருத்துவப் பயன் உள்ளது இதனை பொரியல் அல்லது வடை செய்து சாப்பிடும் போது குடலில் சிறிது அளவு முடி இருந்தால் கூட அதை வெளியே கொண்டு வரக்கூடிய சக்தி படைத்தது.

எனவே என்று வாழைப்பூ பொரியல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம் முதலில் வாழைப்பூ பொரியல் செய்வதற்கு

 

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ1
  • கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன்
  • கடுகு
  • உளுத்தம்பருப்பு சிறிதளவு
  • மிளகாய் வற்றல் 4
  • தேங்காய்ப்பூ ஒரு கப்.

செய்முறை 

முதலில் வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும் அவ்வாறு சுத்தம் செய்யும்போது அதனுடைய மகரந்த நீட்சி மற்றும்  பிளாஸ்டிக் போல் காட்சி அளிக்ககூடிய கீழ்ப்பகுதியை நீக்கிவிடவேண்டும். நீட்டாமல் அப்படியே நறுக்கினால் ஒரு கசப்புத் தன்மையோடு இருக்கும்.

இதனை நீக்கியபின் பொடிப்பொடியாக அரிசி களைந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும். அத்தோடு சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு போட்டு  நன்றாக அலசி எடுத்துக்கொள்ளவும்.

இப்போது வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வாழைப்பூவை இதில் போட்டு நன்கு வதக்கி 5 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும். கடைசியாக துருவி வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கிளறி விடவும் வாழைப்பூ பொரியல் தயாராகிவிட்டது.

துவர்ப்பு சுவையுடன் இருக்கும் இந்த வாழைப்பூவை உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட பழகுங்கள். எதிர்காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய்கள் அணுகாமல் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …