“வெயிலுக்கு ஈஸியான வாழைப்பழ பணிகாரம்..!” – இப்படி செய்யுங்க..!

பாரம்பரிய பலகாரங்களின் வகையில் இந்த பழப்பணிகாரமும் இடம் பிடித்து உள்ளது. இந்த பழப்பணியாரத்தை அனைவரும் வீட்டில் எளிதாக செய்ய முடியும்.

கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் போது எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அதற்கு நீங்கள் எளிமையான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் வாழைப்பழத்தைக் கொண்டு அருமையான இனிப்பு பணியாரத்தை செய்து சாப்பிடலாம்.

இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறப்பானது. அப்படிப்பட்ட இனிப்பு வாழைப்பழ பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வாழைப்பழ பணிகாரம் செய்ய தேவையான பொருட்கள்

1.கால் கிலோ மைதா மாவு

2.இரண்டு ஏலக்காய்

---- Advertisement ----

3. 4 பூவன் வாழைப்பழம்

4. சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை 200

5.எண்ணெய்

செய்முறை

முதலில் மைதா மாவை எடுத்து அதை சல்லடையில் சலித்து ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இரண்டு ஏலக்காயை நன்கு பொடி செய்து அதில் போட்டுக் கொள்ளவும்.பிறகு எடுத்து வைத்திருக்கும் பூவன் பழத்தின் தோல்யை நீக்கி பழத்தை அதில் போட்டு விடுங்கள்.

பிறகு இதனை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிசைந்து விட்ட பிறகு இதில் சர்க்கரையை சேர்த்து இளகி வரும் அளவுக்கு நன்கு பிசைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மாவு பதம் ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும். நிறைய லூசாக இருந்தால் எண்ணெயை வாரி குடித்து விடும். பக்குவமாக பிசைந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு எண்ணெய்யை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கவும். எண்ணெய் நன்கு சூடாகி புகை மேலே கிளம்பி வரக் கூடிய சமயத்தில் நீங்கள் பிசைந்து வைத்திருக்கும். மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துப் போட வேண்டும். இப்போது நீங்கள் சுவையாகவும், சூடாகவும் சாப்பிட வாழைப்பழ பண பணிகாரம் தயார்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பழ பண பணியாரத்தை சாப்பிடுவதின் மூலம் உங்களுக்கு ஆற்றல் எளிதாக கிடைக்கும்.

---- Advertisement ----