நயன்தாராவின் அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தி.. சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..!

பயில்வான் ரங்கநாதன் ( Bayilvan Ranganathan ) தற்போது ஒரு யூடியூப் சேனல் மூலம் பல நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் ஆகியோரை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகிறார். பல முன்னணி நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் சேனல் மூலம் கூறுவதால் இவரது சேனலுக்கு ஏராளமான சப்ஸ்கிரிபர்ஸ் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ராதிகாவின் அம்மாவைப்பற்றி பயில்வான் தரக்குறைவாக பேசி இருந்தார். இதனால் எதர்ச்சியாக ராதிகா கடற்கரையில் பயில்வான் ரங்கநாதன் ஐ பார்க்க அவரை வெளுத்து வாங்கிவிட்டார். அந்தச் செய்தியையும் தனது யூடியூப் சேனல் போட்டிருந்தார் பயில்வான் ரங்கநாதன்.

அதேபோல் சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்துக்கும் பல்வேறு காரணங்களை பயில்வான் தனது யூடியூப் சேனல் மூலம் சொல்லி சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் குறிப்பாக பெண் நடிகைகளை தாக்கி மோசமான கருத்துக்கள் மூலம் தனது யூடியூப் சேனலில் போட்டு வருவதால் இவர் மீது புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : “என் அம்மா தே**வா…?..” – பீச்சில் பயில்வானை வெளுத்து வாங்கிய ராதிகா..! – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகையான நயன்தாரா மீது பயில்வான் ரங்கநாதன் குற்றச்சாட்டை வைத்துள்ளார். நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் எப்போது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா ( Nayanthara ) பல நடிகர்களுடன் நெருக்கமாக இருந்தார் என்றும், அவர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ளார் என்றும் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவுக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லை என்றும் வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்றுக் கொள்வார் என்ற பொய்யான தகவலை ரங்கநாதன் பரப்பி உள்ளார். இதனால் இவர் மீது திவ்யா என்ற நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பயில்வான் ரங்கநாதன் பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தொடர்ந்து பெண்களைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமாவும் பேசி வருகிறார். பல திரை பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தாலும் பயில்வான் இதை நிறுத்திய பாடு இல்லை. இந்நிலையில் தற்போது புகார் அளித்து இருப்பதால் இவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறத என்பதை பார்ப்போம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

முன் பக்கம் முழுசும் கூந்தல்.. பின்னாடி ஃபுல் ஓப்பன்.. “பிரம்மயுகம்” பெண் கதாபாத்திரம் பார்த்த வேலை..

மலையாளத்துறைகளில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளி வந்த பிரம்மயுகம் திரைப்படம் தான் தற்போது டாக் ஆப் த …