பீஸ்ட் படத்தில் இந்த விஷயம்.. ரசிகர்ளுக்கு செம்ம சர்ப்ரைஸ்..!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் பணிகள் மும்முரமாய் நடக்கின்றன. ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் டீஸர், டிரைலர் அப்டேட் கேட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் இப்படத்தின் அப்டேட் இன்று வெளியாக இருப்பதாக நேற்று அறிவித்துள்ளார். அனேகமாக படத்தின் டீசர் அல்லது டிரைலர் பற்றிய அப்டேட்டாக இருக்கலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க : உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. உச்சி முதல் பாதம் வரை காட்டிய ஆண்ட்ரியா..! – நுரை தப்பும் ரசிகர்கள்…!

நெல்சனின் டார்க் காமெடி மற்றும் விஜய்யின் கமர்ஷியல் பார்முலாவில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படத்தின் கதை ஒருநாள் இரவில் நடப்பதுபோன்றும் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும் இப்படி ஏகப்பட்ட தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

இந்நிலையில் இப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருக்குமென்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …