“பீஸ்ட்” படத்தில் “இலுமினாட்டி” சிக்னல் – இணையத்தில் தீயாய் பரவும் குறிப்புகள்..! – பரபரப்பு தகவல்..!

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் பீஸ்ட் ( Beast ) . விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடல் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அனிருத் பாடி உள்ள இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்பாடலின் புரோமோ வீடியோ வைரல் ஆனது.அரபிக் குத்து பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், பீஸ்ட் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் புது தோற்றத்தில் இருக்கும்படியான புகைப்படம் இடம்பெற்று உள்ளது. இந்த போஸ்டரைப் பார்த்து குஷியான விஜய் ரசிகர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, வழக்கமாக பெரிய நட்சத்திரங்கள் படங்கள் அல்லது படங்கள் சம்பந்தப்பட்ட போஸ்டர், டீசர் வெளியாகும் போது இந்த படம் இலுமினாட்டிகளால் கையாளப்படுகின்ற படம், இந்த படத்தில் வரும் காட்சிகள் அல்லது வசனங்களுக்கு ஏற்ப உண்மை சம்பவங்கள் விரைவில் நடக்கும். இலுமினாட்டிகள் இதை நாங்கள் செய்யப்போகிறோம் என்று சொல்லிவிட்டே செய்வார்கள்.

அப்படி சொல்வதற்கான ஊடகமாக சினிமாவை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று இணையத்தில் பலதரப்பட்ட தகவல்கள் பரவி கிடக்கின்றன. கொரோனா வருகையை பிகில் படத்தில் விஜய் மூலம் இலுமினாட்டிகள் அறிவித்தனர்.

நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் கொரோனா வெறித்தனம்…

அதன் பிறகு தான் கொரோனா வைரஸ் வந்து பலரை பலிகொண்டது. பலரது பொருளாதாரத்தை சிதைத்தது என்ற தகவலும் இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.

நெஞ்சுக்குள்ள குடியிருக்கும் நம்ம சனம் வெறித்தனம்.. என்ற பாடல் நெஞ்சு பகுதியை தாக்கும் கொரோனா வைரஸ்-ஐ தான் குறிக்கும்.. அந்த பாடலை நடிகர் விஜய்க்கு பதிலாக கொரோனா வைரஸ் பாடுவதாக நினைத்துக்கொண்டு கேட்டால் இலுமினாட்டிகளின் தந்திரம் பட்டவர்த்தனமாக விளங்கும் என சிலர் கூறி வருகிறார்கள்.

இந்த குற்றச்சாட்டு விஜய் மீது மட்டுமில்லை.. உலகம் முழுதும் முன்னணியின் இருக்கும் நடிகர்கள், பிரபலங்கள் மீது வைக்கப்பட்டு வரும் ஒன்று தான்.

பீஸ்ட் படத்தில் இலுமினாட்டி சிக்னல்..

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இந்த போஸ்டரிலும் சில இலுமிநாட்டி ( Illuminati ) சிக்னல்கள் இருப்பதாக இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

இலுமினாட்டிகள் கடவுள் என்று கூறப்படும் பஃபோமேட் போல நடிகர் விஜய்யும் மூன்று விரல்களை மடித்து, இரண்டு விரல்களை மட்டும் நீட்டி போஸ் கொடுத்துள்ள்ளார்.

போஸ்டரின் பெரும்பாலான பகுதி நட்சத்திரங்களை கொண்டு நிரப்பப்பட்டிருக்கின்றன. விஜய்க்கு இறக்கை இருப்பது போலவும்டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயங்கள் மூலம் இதுவும் இலுமினாட்டிகளின் படம் தான் இந்த படத்திலும் எதிர்கால சம்பவங்களை குறியீடுகளாக கூறியிருப்பார்கள் என பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

இதையெல்லாம் கேக்கும் போது.. யார்ரா நீங்கலாம்.. என தோன்றினாலும்.. ஒருவேளை உண்மை இருக்குமோ.. என்ற ஒரு உருத்தலும் இருக்கத்தான் செய்கிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …