அட கொடுமைய.. ஒரே நாளில் தூக்கப்பட்ட பீஸ்ட்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

பீஸ்ட் காட்சிகள் ரத்து..

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்ட ஒரே நாளில் பீஸ்ட் திரைப்படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு உள்ள சம்பவம் படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக பீஸ்ட் படத்தை அந்நாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: பிரிமியர் ஷோவில் போதிய வரவேற்பை பெறாததன் காரணமாகவும், மேற்கொண்டு திரையிட்டால் வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதாலும், பீஸ்ட் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இந்நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழ்நாடு உட்பட பல திரையரங்குகளில் பீஸ்ட் படத்துக்கு பதிலாக திரையிடப்பட உள்ளது.

என்ன ஆனது சன் பிக்சர்ஸ்-க்கு..

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு என்ன ஆனது..? படத்தின் கதையில் கவனம் செலுத்துகிறார்களா..? என்பது தெரியவில்லை. துக்கடா படத்தை கூட ஹிட் படமாக மாற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமீப காலமாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் கதை மற்றும் திரைக்கதையை நன்கு அறிந்த பிறகு தயாரிக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம், வேண்டுமென்றே லாஸ் கணக்கு காட்ட இந்த மாதிரி படங்களை எடுக்கிறார்களா சன் பிக்சர்ஸ் என்று கலாய்ப்பவர்களையும் பார்க்க முடிகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …