பீஸ்ட் டீசரா..? ட்ரெய்லரா..? எது முதலில் வெளியாகும்..! – படக்குழுவின் பதில் இது தான்..?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படம் ‘பீஸ்ட்’. இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளியிடப் போகிறீர்கள் என தயாரிப்பு நிறுவனத்திடம் ரசிகர்கள் தொடர்ந்து ‘அப்டேட்’ கேட்டு வருகிறார்கள்.

படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் டீசர் கூட இதுவரை வெளியிடப்படாதது ஆச்சரியமளிக்கிறது என திரையுலகத்தினரும் தெரிவிக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஒரு நிமிஷம் Money Heist நைரோபி-ன்னு நெனச்சிட்டோம்..! – கவர்ச்சி உடையில்.. ரசிகர்களை குழம்ப வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

‘பீஸ்ட்’ படத்திற்குப் போட்டியாக இல்லாமல் அடுத்த நாளே வெளியாக உள்ள ‘கேஜிஎப் 2’ படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி 24 மணி நேரத்தில் 100 மில்லியன் பார்வைகளை 5 மொழிகளில் கடந்துள்ளது.

‘பீஸ்ட்’ டீசர் அல்லது டிரைலர் 5 மொழிகளில் வெளியாக அது ‘கேஜிஎப் 2’ படத்தின் 24 மணி நேர சாதனையை முறியடித்தாக வேண்டும். அப்போதுதான் ‘பீஸ்ட்’ படத்துடன் ‘கேஜிஎப் 2’ போட்டியா அல்லது ‘கேஜிஎப் 2’ படத்துடன் ‘பீஸ்ட்’ போட்டியா என்று சொல்ல முடியும்.

இந்நிலையில், பீஸ்ட் படகுழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் கொடுத்த தகவலின் படி பீஸ்ட் டீசர் வெளியாகுமா..? அல்லது ட்ரெய்லர் வெளியாகுமா..? என்ற விசாரித்த போது நேரடியாக படத்தின் ட்ரெயலர் தான் வெளியாகும் எனவும், படத்தின் ரிலீஸின் போது ப்ரோமோக்களை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது என கூறுகிறார்கள்.