“பீஸ்ட்” ட்ரெய்லர்.. கடுப்பில் தியேட்டரை நாசம் செய்த ரசிகர்கள்..! – அட கொடுமைய..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள ‘பீஸ்ட்’ படத்தின் டிரைலர் சற்று முன்னர் யு டியூபில் வெளியானது.

இப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களான ‘அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா’ ஆகிய பாடல்கள் ஏற்கெனவே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ டிரைலர், யூ டியூப் பார்வை எண்ணிக்கையில் புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

யோகி பாபு நடித்து 2019ல் வெளிவந்த ‘கூர்க்கா’ படத்தின் கதையையே மீண்டும் படமாக்கி உள்ளார்களோ என்ற சந்தேகம் வருகிறது. ஒரு ஷாப்பிங் மாலுக்குள் மக்கள் பலரை தீவிரவாதிகள் கடத்தி வைத்திருப்பார்கள். அந்த மாலுக்குள்ளேயே செக்யூரிட்டி வேலை பார்க்கும் யோகி பாபு எப்படி காப்பாற்றுகிறார் என்று நகைச்சுவையாகச் சொன்ன படம்தான் ‘கூர்க்கா’.

இந்தப் படத்தில் அதே மால், அதே மக்கள், அதே செக்யூரிட்டி, கூர்க்கா யோகி பாபுவுக்குப் பதில் சோல்ஜர் விஜய். இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் ‘கூர்க்கா’ படத்தில் கதாநாயகனாக நடித்த யோகி பாபு, இந்த ‘பீஸ்ட்’ படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.’பீஸ்ட்’ படத்தின் முழு கதையும் இந்த மாலுக்குள்ளேயே தான் நகரும் போலிருக்கிறது.

டிரைலரின் ஆரம்பமே மிகச் சாதாரணமாக இருக்கிறது. எந்த ஒரு அதிரடியும் இல்லை. விஜய்யின் ஆக்ஷன் காட்சிகள் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கலாம். டிரைலரில் ”பயமா இருக்கா, இதைவிட இன்னும் பயங்கரமா இருக்கும்” மற்றும் “ஐயாம் எ சோல்ஜர்” என்ற இரண்டே வசனங்களைத்தான் பேசுகிறார் விஜய்.

தியேட்டர் நாசம்…

இந்நிலையில், இந்த ட்ரெய்லரை திருநெல்வேலியில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் ஒளிபரப்பு செய்தார்கள். பெருவாரியான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், ட்ரெய்லரை மீண்டும் போடும் படி கத்தி கூச்சல் போட்டுள்ளனர் ரசிகர்கள். தியேட்டர் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை போல தெரிகின்றது. இதனை தொடர்ந்து, கடுப்பான ரசிகர்கள் தியேட்டருக்குள் மத யானை புகுந்து மிதித்து போல ஒரு மிதி மிதித்து விட்டனர்.

இதனால் தியேட்டரின் கணிசமான இருக்கைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இதை விட குட்டியான ட்ரவுசர் கிடைக்கலையா.. இணையத்தை திக்கு முக்காட வைத்த விஜய் டிவி சுனிதா..!

அசாம் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்து இங்கு தமிழ் சினிமா ரசிகர்களை வக்குவாக கவர்ந்தவர் சுனிதா கோகாய். முதன் முதலில் …