முடி கொட்டும் பிரச்சனை: உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதின் காரணத்தாலும் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதாலும் முடி கொட்டும் பிரச்சனை ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களையும் அதிக அளவு பாதித்து வருகிறது.
மேலும் அதிகரித்து வரக்கூடிய எந்திரமயமான வாழ்க்கை முறையில் மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தமும் முடிகளின் ஆரோக்கியத்தை குறைத்து முடி உதிர்வை உண்டு பண்ணக்கூடிய முக்கிய காரணியாக திகழ்கிறது.
Banana hair mask
எனவே முடி கொட்டக்கூடிய இந்த நிலையை தடுத்து நிறுத்த என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாக பார்க்கலாம்.
முடி வளர்ச்சிக்கும், முடி கொட்டக்கூடிய நிலையில் இருந்து விடுபடவும் வாழைப்பழம் மிக முக்கிய பங்கு வகிப்பதாக பல நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கு காரணம் வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு முடி கொட்டுதலையும் தடுத்து நிறுத்துகிறதாம்.
Banana hair mask
மேலும் வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம் ஜிங்க் போன்றவை உங்களுக்கு கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல் சேதம் அடைந்த கூந்தலை சரி செய்யவும் உதவி செய்கிறது.
இதற்காக நீங்கள் வாழைப்பழத்தை நன்கு மசித்து உங்கள் தலைக்கு ஹேர் பேக்காக பயன்படுத்தும் போது மிகச்சிறந்த மாற்றங்கள் உங்கள் முடிக்கு கிடைக்கும். குறிப்பாக பொடுகினால் ஏற்படக்கூடிய தொல்லையிலிருந்து எளிதில் விடுபட முடியும்.
இந்த வாழைப்பழ ஹேர் பேக் ஆனது உங்கள் தலைமுடியை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவி செய்வதோடு முடி வளர்ச்சியையும் ஊக்கப்படுத்துகிறது.
Banana hair mask
மேலும் இந்த வாழைப்பழ ஹேர் பேக் உடன் நீங்கள் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்து உங்கள் தலையில் தேய்த்து 20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் உங்கள் தலைமுடியை கழுவ வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை செய்வதின் மூலம் உங்களுக்கு முடி கொட்டும் சொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும். மேலும் இது உங்கள் முடி வளர்ச்சியை ஊக்கப்படுத்தி புதிய முடிகள் வளர உறுதுணையாக இருக்கும்.
இந்த ஹேர் பேக்கை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் ஒன்று இரண்டு மாதங்களில் உங்கள் முடிவில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நீங்களே எளிதில் உணருவீர்கள். அப்படி உங்கள் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.