marudhani october october

“அழகு கலையில் பாரம்பரிய மருதாணி..!” – எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பார்ப்போமா?

மருதாணி  தாவரத்தில் இருக்கும் இலை அழகுக் கலையில் பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக கூந்தல் வளர்ச்சி மற்றும் கூந்தலை கருமையாக்கும் திறன் கொண்ட இந்த மருதாணி, நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்களுக்கு ஏற்படும்.

Maruthani

அது மட்டுமல்லாமல் இளநரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்மருதாணி சாறினை தலையில் தேய்த்து விடுவதின் மூலம் இளநரை பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைய முடியும்.

இயற்கையான ஹேர் கலரிங்  செய்வதற்கு உகந்த பொருளாக இந்த மருதாணி இருப்பதால் இதை பயன்படுத்து மூலம் நமது கூந்தலில் எந்த விதமான சிக்கல்களும் ஏற்படுவதில்லை.

Maruthani

மேலும் இந்த மருதாணி இலையை நன்கு அரைத்து சின்ன சின்ன வில்லைகளாக நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊறவிட்டு அதை தலைக்கு தேய்ப்பதின் மூலம் தலை முடி அடர்த்தியாக வளரும்.

அதுமட்டுமல்லாமல் மருதாணி இலையை அரைத்து உங்கள் தலையில் காலை நேரங்களில் ஹேர் மாஸ்காக பயன்படுத்துவதின் மூலம் பொடுகு தொல்லை நீங்கி தலைமுடி மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறிவிடும்.

Maruthani

உடலில் இருக்கும் கூடுதல் சூட்டை தடுத்து உடலை குளிர்ச்சியாக வைத்த கூடிய பணியை மருதாணி செய்கிறது. மேலும் நகச்சுத்து ஏற்படாமல் தடுக்கக்கூடிய சக்தி இந்த மருதாணிக்கு இருப்பதால் கைகள் மற்றும் கால்களில் நீங்கள் மருதாணியை வைப்பதின் மூலம் நகங்களுக்கு ஊட்டச்சத்தில் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவி செய்கிறது.

பிரஸ்சாக மருதாணி இலை கிடைக்கவில்லை என்று இனி நீங்கள் கவலைப்பட வேண்டாம் மருதாணி இலை உலர்ந்த நிலையிலும் கிடைக்கிறது. அதையும் வாங்கி நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் மேற்கூறிய எல்லா பலன்களும் உங்களுக்கு கிடைக்கும்.

Maruthani

எனவே மேற்கூறிய குறிப்புகளை மனதில் கொண்டு மருதாணியை கொண்டு மாதம் ஒருமுறையாவது உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முயற்சி செய்து பாருங்கள்.

--- Advertisement ---

Check Also

face beauty october october

எவ்வளவு கருப்பா இருந்தாலும் உடனே கலராக.. இந்த 2 பொருள் போதும்.. இனி நீங்களும் மில்க் பியூட்டியாக ஃபேஸ் க்ரீம்!!..

அழகு என்பது பெண்களைப் பொறுத்த வரை ஆராதனை செய்யக்கூடிய விஷயமாக உள்ளது. அதிலும் முக அழகை விரும்பாத பெண்களே இல்லை …