Connect with us

அழகு குறிப்புகள்

«அழகுக் கலையில் தேன்..!» – இம்புட்டு குணம் இருக்கா..!

By TamizhakamApril 19, 2023 8:13 PM IST

எலுமிச்சை பழத்தை எப்படி தேவ கனி என்று அழைக்கிறோமோ, அதுபோல இயற்கையாக கிடைக்கக்கூடிய அமிர்தமாக தேன் கருதப்படுகிறது. இந்தத் தேனை பயன்படுத்துவதன் மூலம் நமது உள்ளும், புறமும் அழகாவதோடு ஆரோக்கியமாகவும் நம்மை வைத்துக் கொள்கிறது.

எனினும் நாம் பயன்படுத்துகின்ற தேன் சுத்தமான தேனாக இருக்கக்கூடிய பட்சத்தில் நமக்கு அதிகமான நன்மைகளை இது தரும். இது எண்ணற்ற நன்மைகளை அழகு கலையில் வழங்குகிறது.

beauty honey

தேனை வைத்து நம் அழகை மேலும் அழகாக என்னெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்தக் கட்டுரையில் விளக்கமாக தெரிந்து கொள்ளலாம்.

அழகுக் கலையில் தேன்

சிலருக்கு உதடு கருமையான நிறத்தோடு இருக்கும். எந்தவிதமான ரசாயன பொருட்களை பயன்படுத்தினாலும் அது சரியாகாமல் அப்படியே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் மலை தேனை தினமும் நான்கு முதல் ஐந்து முறை அப்படியே தடவி உங்கள் விரல்களால் லேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதின் மூலம் ரத்த ஓட்டம் அதிகரித்து உங்கள் உதடு சிவப்பாக மாறும்.

beauty honey

முகப்பொலிவை அதிகரிக்க நீங்கள் ஒரு டீஸ்பூன் அளவு தேனோடு, ஆலிவ் ஆயில் இரண்டையும் நன்கு குழைத்து உங்கள் முகம் முழுவதும் அப்ளை செய்துவிட்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுவதன் மூலம் முகம் ஜொலி ஜொளிப்பாக மாறிவிடும்.

உங்கள் முகத்தில் முகப்பரு இருந்தால் அந்த முகப்பருவின் மேல் தேனை வைத்துவிட்டு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகப்பருவை கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்யும்போது முகப்பரு மற்றும் முகப்பருவால் ஏற்படுகின்ற தழும்பு விரைவில் மறைந்து போகும்.

beauty honey

பெண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மற்றும் முகச்சுருக்கங்களை நீக்கக்கூடிய ஆற்றல்  தேனுக்கு உள்ளது. தேனை தினமும் காலை எழுந்ததும் உங்கள் முகத்தில் தேய்த்து விட்டு கால் மணி நேரம் கழித்து முகத்தை கழுவுவதின் மூலம் கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையம் மற்றும் முகச்சுருக்கங்கள் நீங்கும்.

எனவே மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தி தேனை அன்றாடம் உங்கள் முக அழகை மேம்படுத்த பயன்படுத்தி வந்தால் கட்டாயம் அதிக அளவு நன்மைகள் கிடைக்கும்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top