“ஃபோலிக் அமிலம் பெண்களுக்கு தரும் நன்மைகள்..!” – என்னென்ன பார்ப்போமா?

பொதுவாக பெண்கள் எந்த வயதில் இருந்தாலும் அவர்கள் மருத்துவமனைக்குச் செல்லும்போது அவர்களுக்கு ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை தருவது இயல்பான ஒன்றுதான். இந்த ஃபோலிக் அமிலம் பெண்களின் உடலுக்கு மிக அற்புதமான நன்மைகளை தருவதால் தான் அந்த மாத்திரைகளை எழுதித் தருகிறார்கள்.

 அப்படிப்பட்ட ஃபோலிக் அமிலம் நம் உடலுக்கு செய்யக்கூடிய அற்புதமான நன்மைகள் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஃபோலிக் அமிலத்தால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்

ஃபோலிக் அமில மாத்திரையை சாப்பிட பெண்கள் உடம்பில்  எளிதாக ஏற்படக்கூடிய ரத்த சோகை நோயை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருளை இது உற்பத்தி செய்ய உதவி செய்கிறது.

பெண்களின் கர்ப்பப்பை வாய் புற்று நோய், நுரையீரல் புற்று நோய், பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றை தடுத்து நிறுத்த கூடிய ஆற்றல் இந்த ஃபோலிக் அமிலத்துக்கு இருப்பதால்தான் ஃபோலிக் அமிலச்சத்து மத்திரைகள் அதிகளவு பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மேலும் இந்த ஃபோலிக் அமிலம் ஆனது உடலில் இருக்கக்கூடிய கொழுப்பு அளவை குறைக்க உதவி செய்கிறது. இது எல் டி எல் என்ற கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாக ஆய்வுகள் பல கூறுகிறது.

---- Advertisement ----

கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்கள் மருத்துவர்கள் கூறும் வழிமுறைகளை பின்பற்றி இந்த ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது கருமுட்டை வளர்ச்சிக்கும், கரு உருவாகவும் இது உதவி செய்கிறது.

பெண் நீரழிவு நோயாளிகளுக்கு மிகச்சிறந்த சப்லிமெண்டரியாக இந்த ஃபோலிக் அமிலம் உள்ளது. இது இன்சுலினை அதிகளவு உற்பத்தி செய்ய உதவி செய்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.

இதயத்தை பாதுகாக்க உதவுவதோடு இதயநோய் அபாயத்தை குறைக்க இந்த ஃபோலிக் அமிலம் உதவி செய்கிறது. கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளின் நரம்பு குழாய் குறைபாடுகளை ஏற்படாமல் விட எந்த ஃபோலிக் அமிலம் உறுதுணையாக உள்ளது.

எனவே ஃபோலிக் அமில மாத்திரைகளை வேண்டா வெறுப்பாக சாப்பிடாமல் உரிய வேளையில் நீங்கள் சாப்பிடும் போது மேற்கூறிய நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

---- Advertisement ----