Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கருப்பா இருக்கிற நீங்க வெள்ளையா மாற..!” உருளைக்கிழங்கு பயன்படுத்துங்க..!

உலகெங்கிலும் இருக்கக்கூடிய மக்கள் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த உருளைக்கிழங்கு அழகு கலையிலும் அபாரமாக தன்னுடைய பணியை செய்கிறது என்றால் அனைவருக்குமே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

இது உண்மை தான் உருளைக்கிழங்கை கொண்டு எண்ணற்ற வழிமுறைகளில் நாம் நமது அழகை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

அப்படிப்பட்ட உருளைக்கிழங்கை பயன்படுத்தி நாம் சரும அழகை இயற்கை வழியில் எப்படி அதிகரிக்கலாம் என்பதை பற்றி விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

சரும அழகை அதிகரிக்க உதவும் உருளைக்கிழங்கு

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவர்கள் இனிமேல் உருளைக்கிழங்கை எடுத்து பயன்படுத்தினால் போதும் உங்கள் கருப்பு முக அமைப்பு மாறி பளிச்சென்று வெண்மையாக மாறிவிடுவீர்கள்.

இதற்காக நீங்கள் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து அதில் இரண்டு டீஸ்பூன் அளவு பால் பவுடர் அல்லது பாதாம் எண்ணெய் சேர்த்து பேஸ்டாக மாற்றி உங்கள் முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே விடுங்கள். பிறகு இது நன்கு காய்ந்த பிறகு குளிர்ந்த நீரைக் கொண்டு உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.

--Advertisement--

 இதனை தொடர்ந்து செய்வதின் மூலம் நீங்கள் கருமை நிறமாக இருப்பது போய் ஆச்சரியப்படக்கூடிய வெள்ளை நிறத்திற்கு மாறிவிடுவீர்கள்.

மேலும் இந்த உருளைக்கிழங்கு சாறு எடுத்து அதனோடு எலுமிச்சம்பழ சாறு சேர்த்து நீங்கள் உங்கள் முகத்தில் தேய்த்து வருவதின் மூலம் இளமையான தோற்றத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு, முல்தான்மெட்டி இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் வடிவத்தில் மாற்றி அதனை உங்கள் சருமம் முழுவதும் தடவி அது நன்கு உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்த பின்பு நீங்கள் மாய்ஸ்ரைசலை உங்கள் மேனிக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் முகப்பருக்கள் மாறுவதோடு சருமத்தில் இருக்கும் கருப்புகள் மற்றும் அழுக்குகள் எளிதில் நீங்கும்.

சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் யூவி கதிர்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள தினமும் உருளைக்கிழங்கு சாறை முகம் மற்றும் கைகளில் தடவியபடி நீங்கள் வெளியே சென்று வந்தால் உங்களுக்கு யூவி கதிர்களால் வரக்கூடிய பாதிப்புகள் ஏற்படாமல் உங்கள் சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

எனவே மேற்கூறிய குறிப்புகளை பயன்படுத்தி உருளைக்கிழங்கை கொண்டே உங்கள் மேனி  அழகை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.

Continue Reading
 

More in

Trending Now

To Top