“பள பளக்க சந்தனம்..!”- இப்படி பயன்படுத்தி பாருங்க..!!

எவ்வளவு சரும பிரச்சனைகள் இருந்தாலும் அதை சரி செய்யக்கூடிய ஆற்றல் சந்தனத்திற்கு உள்ளது. அதுவும் உரைத்து எடுத்து பயன்படுத்தும் சந்தனத்திற்கு தான் அதிக அளவு பவர் உள்ளது என்று கூறலாம்.

 சந்தனம் உடலுக்கு தேவையான குளிமையை தருவதோடு மட்டுமல்லாமல் கை, கால் முகம் கழுத்துப் பகுதிகளில் கருப்பாக இருப்பதை நீக்கி இயல்பான தோல் நிறத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல் கொண்டது.

அப்படிப்பட்ட இந்த சந்தனத்தை கோடையில் நீங்கள் பயன்படுத்தி சருமத்திற்கு தேவையான குளிர்ச்சியை தருவதோடு என்னென்ன நன்மைகளை பெறலாம் என்பதை பார்க்கலாமா.

சருமத்திற்கு சந்தனம் செய்யும் நன்மைகள்

குளிர்ச்சியை அள்ளிக் கொடுக்கக் கூடிய சந்தனம் நமது சருமத்திற்கு மிகவும் சிறந்த நண்பனாக உள்ளது. சருமத்தில் ஏற்படக்கூடிய எரிச்சல், அரிப்பு, காயம் போன்றவற்றுக்கு உடனடியாக நிவாரணம் தருகிறது.

 அது மட்டுமல்லாமல் இதில் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் அதிகளவு இருப்பதால் சருமத்தில் தொற்றுகள் அண்ட விடாமல் பாதுகாக்கிறது.

---- Advertisement ----

சருமத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நீக்கி சருமத்தை புத்துணர்வுடனும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள இந்த சந்தனம் உதவி செய்கிறது.

சந்தனத்தை நன்கு உரைத்து நீங்கள் பூசி வருவதன் மூலம் உங்கள் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் கழுத்தில் இருக்கும் கருப்பு மருக்கள் போன்றவை நீங்கும் .அது மட்டுமல்லாமல் முகப்பருவை ஏற்படாமல் தடுக்கக்கூடிய தன்மை எந்த சந்தனத்திற்கு உள்ளது.

சுத்தமான சந்தனத்தை உரைத்து அதனோடு பன்னீரை விட்டு உங்கள் முகத்தில் தடவினால் சருமத்தில் இருக்கும் உஷ்ணம் தணிந்து முகம் பளபளப்பாகவும் வெள்ளை நிறத்திற்கும் மாறும்.

வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் சந்தன எண்ணையை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை நீங்கள் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள முடியும்.

சந்தனத்தோடு முல்தான்பட்டி, பன்னீர் இவை இரண்டையும் நன்கு கலந்து உங்கள் முகத்துக்கு பேஸ் பேக் போல் போட்டு விடுங்கள். இந்த ஃபேஸ் பேக் குறைந்தது அரை மணி நேரமாவது உங்கள் முகத்தில் அப்படியே இருக்க வேண்டும்.

 இதனை அடுத்து அரை மணி நேரம் கழிந்த பிறகு உங்கள் முகத்தை நீங்கள் வெதுவெதுப்பான நீரில் கழிவி விடுங்கள். இப்படி கழுவுவதன் மூலம் உங்களுக்கு முகப்பரு தொல்லை ஏற்படாது. முகம் பளபளப்பாகவும் நல்ல வெள்ளை நிறமாகவும் எளிதில் மாறும்.

உங்கள் முகம் பளிச்சென்று பிரைட்டாக மாற சந்தனத்தோடு லாவண்டர் எண்ணெயை கலந்து உங்கள் முகத்தில் பூசி விடுங்கள். 10 நிமிடத்திற்கு பிறகு சிறிதளவு பன்னீரை உங்கள் முகத்தில் கைகளால் தேய்த்து விடுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து நீங்கள் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள் இதனைத் தொடர்ந்து செய்வதின் மூலம் உங்கள் முகம் ரைட்டாக மாறிவிடும்.

---- Advertisement ----