சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் “பாக்கியலக்ஷ்மி” சீரியல் நடிகையா இது..?

விஜய் டிவியில் முன்னணி சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இதில் இனியாவாக நடித்து வருபவர் நேஹா மேனன். தமிழ் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது பிசியான நடிகையாக கலக்கி கொண்டிருக்கிறார்.

தற்போது அவருக்கு வயது 19. கேரள மாநிலம் சாலக்குடியை பூர்வீகமாக கொண்ட இவர், வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தற்போது கல்லூரி படித்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் பைரவி என்ற சீரியலின் மூலம் தான் அறிமுகமானார்.

அதன் பின்னர், பிள்ளை நிலா, நிறம் மாறாத பூக்கள், தமிழ்செல்வி தொடரில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது வாணி ராணி தொடர் தான்.கடந்த 2013ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும்பாலான இல்லத்தரசிகளின் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று நிறைவுற்ற தொடர் வாணி ராணி.

இதில் ராதிகாவின் கடைசி மகளாக ரொம்பவே புத்திசாலி மகளாக நடித்திருப்பார். இவரின் துரு துரு பேச்சு, நடிப்பு ராதிகாவுக்கே மிகவும் பிடிக்குமாம். குறிப்பாக இவருக்கும் ராதிகாவுக்கு இடையேயான சீன்கள் அனைவரும் ரசிக்கும் படியாகவே இருக்கும்.

இந்த சீரியலுக்கு பின்பு இனியா, பெரும்பாலான ரசிகர்களால் தேனு என்றே அழைக்கப்பட்டார். ஐந்து வருடங்கள் ஓடி மிகப் பெரிய வெற்றி பெற்றது இந்த தொடர்.தி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த குறும்படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. சீரியல் மட்டுமல்லாது திரைப்படங்களில் நடித்துள்ளார்.

---- Advertisement ----

Check Also

அவ எனக்கு தாண்டா.. நடு நம்பர் நடிகைக்காக நடு ரோட்டில் அடித்துக்கொண்ட நடிகர்கள்… அட கொடுமைய..!

திரைத்துறையில் தினம் தினம் புது புது கூத்துக்கள் அரங்கேறி வருகிறது. அவற்றைப் பற்றிய சுடச்சுட செய்திகளும் இணையங்களில் வெளி வந்து …