அதிர்ச்சி : மீண்டும் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்ட பாரதிராஜா – வெளியான மருத்துவமனை அறிக்கை..!

 

என் உயிரினும் மேலான தமிழ் மக்களே என்ற கணீர் குரலுக்குச் சொந்தக்காரரான இயக்குனர் பாரதிராஜா. கிராமத்து அழகை எல்லாம் தனது படத்தின் வழியாக மக்களுக்கு வெளிப்படுத்திய அற்புத இயக்குனர்.  தமிழில் பல கிராமத்து படங்களை எடுத்து  தமிழ் மக்களின் உறவின் ஆழம் பற்றியும், உறவுகளில் அவசியம் பற்றியும் தனது ஒவ்வொரு படங்களிலும் பதியம் போட்டு சொன்னவர்  இயக்குனர் பாரதிராஜா.

 சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சைகள் தீவிரமாக அளிக்கப்பட்டும் பலன் ஏதும் இல்லாத நிலையில் இவர் எம்ஜிஆர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட தரமான மருத்துவத்தின் காரணமாக விரைவில் நலம் ஆகி நார்மல் வார்டுக்கு வந்தார். இவருக்கு அஜீரணக்கோளாறு, நீர்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி இருந்ததாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில்  இவற்றை எல்லாம் சரி செய்து தற்போது தான் டிஸ்சார்ஜ் ஆயிருந்தார்.

 இந்நிலையில் இவர் சென்னை நீலாங்கரையில் உள்ள இவரது சொந்த வீட்டில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். அந்த சமயத்தில் திரைப்பிரபலங்கள் மற்றும் முதல்வர் இவரை சந்தித்து நலம் விசாரித்து அனைவரும் அறிந்த விஷயம்தான்.

பாரதிராஜாவை பொறுத்தவரை இவர் டைரக்டராக மட்டுமல்லாமல் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் நடித்த திருச்சிற்றம்பலம் படம்  அனைவரின் கவனத்தை ஈர்த்தது தனுஷோடு இணைந்து நடித்த இவர் நடிப்பு பாராட்டுக்கு உரியதாக அமைந்திருந்தது.

தற்போது திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்த உடல்நிலை கோளாறுக்கு முக்கியமாக சிறுநீரக பிரச்சனை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்த பிரச்னையை சரி செய்த பிறகு மீண்டும் அவர் வீடு திரும்புவார் என்ற மருத்துவமனை அறிக்கை கொடுத்துள்ளது. எனவே ரசிகர்கள் யாரும் இதைப் பற்றி பதட்டம் அடைய வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மூன்று நாட்களில் அவர் கண்டிப்பாக வீடு திரும்பி விடுவார் என்று  கூறுகிறார்கள்.மேலும் இவரது ரசிகர்கள் இவர் மீண்டும் திரும்பி நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த ஊசி போட்டுக்கிட்டு இந்த கவர்ச்சி நடிகை நடிப்பார்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட திடுக் தகவல்..!

தமிழ் சினிமாவில் எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் வந்தாலும், போனாலும் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கான இடத்தை யாராலும் நெருங்க கூட முடியவில்லை …