இயக்குனர் பாரதிராஜாவை இவர் சந்திக்க காரணம் என்ன..? – அரசியல் உள்நோக்கம் கலக்கப்படுகிறதா..?

 என் இனிய தமிழ் மக்களே என்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிக கோளாறு மற்றும் நீர் சத்து குறைபாடு உள்ளது என்று கூறினார்கள்.

இதனை அடுத்து சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த இவர் பின் சென்னையில் உள்ள இவரது வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வந்தார் இதை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் இவரை சந்தித்து நலம் விசாரித்தார்கள்.

 இதனைத் தொடர்ந்து மீண்டும் பாரதிராஜாவின் சிறுநீரகக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விட்ட சூழ்நிலையில் மறுபடியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து தொலைபேசியில் முதல்வர் அவரிடம் நலம் விசாரித்தார். மேலும் பல திரை உலக ஒத்தகட நட்சத்திரங்கள் இவரிடம்  தொடர்பு கொண்டு பேசி இருந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து அதிமுகவின்  பிரமுகரான பன்னீர்செல்வம் இவரை சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார் அது நிமித்தமான புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது. இதனை பார்த்து சில ரசிகர்கள் எதற்காக பாரதிராஜாவை இவர் சந்தித்திருக்கிறார் இதில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் உள்ளதா? என்பது போன்ற கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.

அதற்கான எந்தவிதமான விளக்கங்களையும் இருவரும் கொடுக்கவில்லை எனினும் ஒரு சிலர் வயதின் காரணமாக இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

---- Advertisement ----

மேலும் மரியாதை நிமித்தமாக தான் பன்னீர்செல்வம் பாரதிராஜாவை சந்தித்திருக்க வேண்டும் இதில் வேறு எந்த அரசியல் உள்நோக்கமும் இருக்கக் கூடிய சூழ்நிலை தற்போது இல்லை என்று  பேசிக்கொள்கிறார்கள்.

 அரசியலைப் பொறுத்தவரையில் எப்போது எதிரி, நண்பன் ஆவான். நண்பன் ,எதிரியாவான் என்பதை கூறமுடியாது காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

எனவே விரைவில் பாரதிராஜா போதுமான அளவு உடல்நலம் தோடு  பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ரசிகர்கள் விருப்பப்பட்டு இருக்கிறார்கள் உடல்நலம் தேறி வர பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள்.

---- Advertisement ----