என்னடா சொல்றீங்க..? ஜாங்கிரி மதுமிதாவா இது..? ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டாரே..!

திரைப்படத்துறையைப் பொறுத்தவரை ஹீரோ , ஹீரோயின்களை விட காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் நடிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பும் அதிக வருடங்கள் மார்க்கெட் கிடைத்துவிடும்.

அப்படித்தான் மிகவும் இளம் வயதிலேயே நல்ல அழகான தோற்றம் இருந்தும் கூட ஹீரோயினுக்கு ஏற்ற ஒரு. லுக் இருந்தாலும் காமெடி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா:

அறிமுகமான ஆரம்பத்திலே மிகப்பெரிய ஃபேமஸானவர் தான் ஜாங்கிரி மதுமிதா. இவர் திரைப்படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் லொள்ளு சபா என்றும் நகைச்சுவை தொடரில் நடித்து பெரும் புகழ்பெற்றார்.

அதன் மூலம் தான் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அது மட்டும் இல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடர்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

திரைப்பட வாய்ப்பு கிடைக்க தொடங்கியதை அடுத்து காமெடி நடிகையாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சந்தானம் நடித்து வெளிவந்த திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக இவர் நடித்த பெரும் புகழ்பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

ஓகே ஓகே தேன் அட:

இந்த திரைப்படத்தில் “தேனடை”என்ற ரோலில் நடித்த அவரது காமெடி ரோல் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக சந்தானம் மற்றும் மதுமிதாவின் பேர் மேட்சிங் அவ்வளவு சூப்பராக இருந்தது.

தியேட்டரில் கைதட்டி எல்லோரையும் சிரிக்க வைத்தது என்றே சொல்லலாம். முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

அப்படத்தை தொடர்ந்து மிரட்டல், அட்டக்கத்தி ,கண் பேசும் வார்த்தைகள், சொன்னா புரியாது, ராஜா ராணி, இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, நலனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

நடித்த படங்கள்:

மேலும், தெனாலிராமன், வெள்ளைக்கார துரை, காக்கி சட்டை, முனி3, டிமான்டி காலனி ,புலி , கவலை வேண்டாம், ஸ்கெட்ச், கஜினிகாந்த், விஸ்வாசம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து இவர் பிரபலமான காமெடி நடிகையாக தென்பட்டு வந்தார் .

மிக குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் ஜாங்கிரி மதுமிதாவுக்கு கிடைக்க துவங்கியதால் பிரபலமான காமெடி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் .

இதனிடையே அவர் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .

இந்த நிகழ்ச்சியின் மூலம் மேலும் தனக்கான அடையாளத்தை அதிகரித்துக் கொண்டார் மதுமிதா. இந்த நிகழ்ச்சியில் மதுமிதாவின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பிக்பாஸ் கொடுத்த அடையாளம்:

அது மட்டுமில்லாமல் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறுவது பெரும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் ஆக பார்க்கப்பட்டது.

பிக்பாஸிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இதனிடையே தனது சமூக வலைதளங்களிலும் மதுமிதா ஆக்டிவாக இருந்து வருகிறார் .

இவர் தனது சொந்த அத்தை மகனான மோசஸ் ஜோயல் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய மதுமிதா:

இன்று வரை அவர்களுக்கு குழந்தை ஏதும் இல்லை தொடர்ச்சியாக தனது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவா புகைப்படம் வீடியோ என ஏதேனும் பதிவிடுவார் .

அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் டிரீஸ் வீடியோ இணையவாசிகளின் கிண்டலுக்கும் கேளிக்கும் உள்ளாகி உள்ளது.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் சிலர் ஜாங்கிரி மதுமிதாவா இது? ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி மாறிட்டாங்களே என இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/reel/C8hCeAdyy19/?utm_source=ig_web_copy_link

---- Advertisement ----