இந்த வார வெளியேறப்போவது இவர் தான்..! – அதிர்ச்சியில் பிக்பாஸ் ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த வாரம் அபிநய் எலிமினேட் செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த வாரத்தில் புது குழுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது.

இதில், போட்டியாளர்களின் உறவினர்கள், நண்பர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அவர்களை சந்திப்பார்கள்.தற்போது 80 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் , இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதையும் கணித்துள்ளனர் நெட்டிசன்கள்.

இந்த வார நாமினேஷன் பட்டியலில், பிரியங்கா, பாவனி, நிரூப், அக்சரா, வருண் மற்றும் சிபி ஆகிய ஆறு பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் அக்ஷரா தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளாராம்.எனவே, இந்த வாரம் அக்ஷரா தான் வெளியேறுவார் என அடித்து கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அக்ஷராவை தொடர்ந்து, வருண் மற்றும் நிரூப் ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அதே போல் இந்த வாரம் அதிக ஓட்டுகளை பெற்ற போட்டியாளராக பிரியங்கா உள்ளார் என்றும் அவரை அடுத்து பாவனி மற்றும் சிபி பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனவே கூறிட்டன வாக்குகளுடன் இந்த வாரம் அக்சரா ரெட்டி வெளியேற போவதாக வெளிவந்திருக்கும் தகவல் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …