ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!

ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியானது  மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு எளிதான ஒரு கருவியாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைய முடியும் என்பதற்காகவே பலர் போட்டி போட்டு கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்வது உண்டு.

அதனால்தான் ஒரு பிக் பாஸ் நிகழ்ச்சியில் 20 பேர் வரை கலந்து கொண்டாலும் கூட பஞ்சமில்லாமல் அதில் கலந்து கொள்வதற்கு பிரபலங்கள் வருவதை பார்க்க முடியும். ஏனெனில் எந்த அளவிற்கு பிராபலங்களாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தான் அவர்களுக்கு வரவேற்ப்பும் இருந்து வரும்.

தமிழ் பிக்பாஸ் பிரபலம்

அப்படியாக விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் அடைந்தவர் பாலாஜி முருகாதாஸ். டைட்டில் வின்னரான பாலாஜி முருகதாஸ் சமீபகாலமாக பேசி வரும் விஷயங்கள் எல்லாம் அதிக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன.

ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!

தொடர்ந்து திமுகவை குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் பாலாஜி முருகதாஸ். அண்மையில் கூட அவர் தனது எக்ஸ் தளத்தில் நசுக்கப்பட்டோம் என சொல்பவர்கள் எல்லாம் வாரிசுகளை வைத்து படம் எடுக்கிறார்கள் என்று விமர்சித்து இருந்தார். அதன் மூலமாக நேரடியாக அவர் இயக்குனர் மாரி செல்வராஜை கடுமையாக தாக்கி இருந்தார்.

உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து

உதயநிதி ஸ்டாலினை வைத்து மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படம் மாமன்னன். அந்த திரைப்படத்தை மறைமுகமாக தாக்கிதான் அப்படி பேசியிருந்தார் பாலாஜி முருகதாஸ். அப்பொழுதே அது அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக மாறியது.

ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன் உதயநிதிக்கு எப்படி இவ்வளவு சொத்து..? தமிழ் பிக்பாஸ் பிரபலம் கேள்வி..!

இதனை அடுத்து திமுக தொண்டர்கள் பலரும் பாலாஜி முருகதாஸின் கருத்துக்கு கருத்தால் கோபம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மோசமாக பாலாஜி முருகதாஸை திட்டத் தொடங்கினர். இதனால் கோபம் அடைந்த பாலாஜி முருகதாஸ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து நிறைய  சர்ச்சைக்குரிய விஷயங்களை பேச தொடங்கினார்.

ரயிலில் வித்அவுட்டா வந்தவரின் பேரன்

உதயநிதி ஸ்டாலினுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் வந்தது. அவருடைய தாத்தா வித்அவுட்  டிக்கெட்டில் சென்னை வந்ததற்கு அவரை கைது தானே செய்திருக்க வேண்டும். உதயநிதி சொத்து குறித்து பதில் சொல்லுங்கடா என்று தொண்டர்களிடம் கேள்வி கேட்டு நேரடியாகவே ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார் பாலாஜி முருகதாஸ்.

மேலும் உதயநிதியின் குடும்பமே ஒரு ஊழல் குடும்பம் என்றெல்லாம் காட்டமான விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார்  அதற்கு பதிலளித்த தொண்டர்கள் திமுக உங்களை கைது செய்யப்போகிறது ரெடியாக இருந்துகோங்க என்று கூறியிருந்தார்கள்.

அதற்கு பதில் அளித்த பாலாஜி ”முருகதாஸ் முடிஞ்சா என்ன கைது பண்ண சொல்லுங்கடா அவங்களால முடியாது ஏன்னா நான் சுத்தமானவன் என்று சவால் வேறு விட்டிருக்கிறார் இப்படியாக இவருக்கும் ரசிகர்களுக்கும் நடந்த சண்டை இப்பொழுது பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது.