இது யாருன்னு தெரியுதா..? – வைரலாகும் பிக்பாஸ் ராஜுவின் பழைய வீடியோ.!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.அவர்களில் ஒருவர் நடிகர் ராஜு ( BiggBoss Raju ).

திருநெல்வேலியை சேர்ந்த இவர் இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் சில காலம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் ராஜு. தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இதில் கவினின் தோழனாக நடித்திருந்தார்.இந்த சீரியலுக்கு நல்ல ரீச் கிடைத்தது. இதனை தொடர்ந்து பின்னர் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார்.

பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார் ராஜு. பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் சீசன்2வில் மாயனின் நண்பனாக கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

சினிமா நடிகர், சீரியல் நடிகர், உதவி இயக்குநர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு முகங்களை கொண்டுள்ள ராஜு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.அடிக்கடி தனது பல குரல் திறமையை காட்டி பார்வையாளர்களையும் ஹவுஸ்மேட்டுகளையும் குஷிப்படுத்தி வருகிறார்.

---- Advertisement ----

இதனாலேயே இந்த சீசனில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஆண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ராஜு. இந்நிலையில், இவர் இளம் வயதில் நடித்த குறும்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

---- Advertisement ----