கண்களைச் சுற்றியிருக்கும் சுருக்கம் மற்றும் கருவளையத்தை நீக்குவது எப்படி

25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்குகிறோம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவலாம். 

மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் செய்து கொடுக்கலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி அமைந்துவிடும்.

சுருக்கம் நீங்க:

சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிங் கிரீம் அல்லது பாதாம் ஆயில் பயன்படுத்தலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம்.

 தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும் அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்து வந்தால் கண்களின் கீழ் உள்ள சுருக்கங்கள் காணாமல் போகும்.

கருவளையம்

இன்றைய உலகில் உள்ள பெண்கள், ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால் கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்தே இந்த கருத்தை நாம் சுலபமாக போகலாம்.

ஐந்தே நாட்களில் கருவளையத்தை போக்க எளிய வழி 

 வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் தொடர்ந்து செய்தாலே போதும் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். 

மேலும் 2 துண்டு வெள்ளரிக்காயில் அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து தினமும் இதை கண்களை சுற்றி பூசி 3 நிமிடம் கழித்து  கழுவினால் கருவளையம் மறைந்து போகும்.

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதிகளில் கருவளையங்கள் வர விடாமல் நாம் தவிர்க்கலாம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …