Breaking News

என்னது…! – இந்த ஹிட் பாடல்களை எல்லாம் பாடியது நடிகர் நகுலா..? – தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் சினிவில் நடிக்க வந்தவர் நகுல். நடிகை தேவயானியின் தம்பி. பாய்ஸில் அவர் பயங்கர குண்டாக இருந்தார். குண்டுப் பிள்ளையாக இருந்த அவர், உடம்பை ஸ்லிம் ஆக்கி கொண்டு ஹீரோ ஆன போது பலரும் நம்பவே இல்லை. 

 

தன் வாழ்நாளில் எப்படி படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன் என்று பலர் சொல்வார்கள். ஆனால் படிப்படியா எப்படி குறைந்து வந்திருக்கிறேன் பாருங்க என்று பிட்டாக மாறினார் நகுல். 

 

“காதலில் விழுந்தேன்” படத்தில் இடம் பெற்ற நாக்கு முக்க பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டாக இளம் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்”, “மாசிலாமணி”, “நான் ராஜவாகப் போகிறேன்”, “வல்லினம்” ஆகிய படங்களில் நடித்தார். 

 

இடையே சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்றார். இவர் 2016ஆம் ஆண்டு தொகுப்பாளர் ஸ்ருதி பாஸ்கர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். 

 

 

நகுல் – ஸ்ருதி இருவருமே சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையைப் பற்றிப் பகிர்ந்து வருபவர்கள்.காதலில் விழுந்தேன் படம் மூலம் ஹீரோ ஆனார். இதில் அவர் ஜோடியாக சுனேனா நடித்திருந்தார். 

 

விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.சன் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்தப் படம் நகுலுக்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது. பி.வி.பிரசாத் இயக்கி இருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற, நாக்க முக்க பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது. 

 

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விளம்பரம் போட்டே படத்தை ஹிட் ஆக்கியது சன் பிக்சர்ஸ். இதையடுத்து அவர், மாசிலாமணி என்ற படத்தில் நடித்தார். இதிலும் அவர் ஜோடியாக சுனேனா நடித்திருந்தார். 

 

என்.ஆர்.மனோகர் இயக்கி இருந்த இந்தப் படமும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது.காதலில் விழுந்தேன் படத்துக்கு பின், நகுல், சுனைனா மீண்டும் இணைந்து, எரியும் கண்ணாடி என்ற படத்தில் இப்போது நடித்து வருகின்றனர்.

 

பின்னணி பாடகர் நகுல்

 

நடிகர், நடன இயக்குனர் என்பதை தாண்டி நகுல் ஒரு நல்ல பின்னணி பாடகரும் கூட. இவர் பாடிய பாடல் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தவை. இவர் பாடிய லிஸ்ட் -ஐ பார்த்தால் என்னது.. இந்த பாட்டெல்லாம் நகுல் பாடியதா..? என்று ஒரு நிமிடம் திகைத்து தான் போவீர்கள்.

அவர் பாடிய பாடல்கள் பட்டியல் இதோ, 

  • காதல் யானை – அந்நியன்
  • X-மச்சி Y-மச்சி – கஜினி
  • மஞ்சள் வெயில் மாலையிலே – வேட்டையாடு விளையாடு
  • கற்க கற்க – வேட்டையாடு விளையாடு
  • ஹூரே ஹூரே – வல்லவன்
  • நாக்கு முக்க – காதலில் விழுந்தேன்
  • எப்படி என்னுள் காதல் – கந்த கோட்டை
  • நகுலா – வல்லினம்
  • லிவ் த மூமென்ட் – கதை திரைக்கதை வசனம் இயக்கம்

---- Advertisement ----

Check Also

1½ மணி நேரம் உடலுறவில் ஈடுபட இதை பண்ணுங்க.. ஜாக்குவார் தங்கம் வெளியிட்ட Breaking தகவல்..!

தமிழ் சினிமாவில் பல காலங்களாக சண்டை பயிற்சியாளராக இருந்து வருபவர் ஜாகுவார் தங்கம். தன்னுடைய ஆறு வயது முதலே சிலம்பம் …