டைட்டான உடையில் ஆக்சன் காட்டி.. ரசிகர்கள் பெருமூச்சு விட வைத்த வரலக்ஷ்மி சரத்குமார்..! – வைரல் போட்டோஸ்..!

 

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் நிறைய வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நீடிக்க முடியும். இல்லாவிட்டால், கோலிவுட்டின் கமர்சியல் சூறாவளியில் சில படங்களிலேயே காணாமல் போக வேண்டியதுதான். 

 

அப்படி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி வாரிசு நடிகையாக சினிமாவுக்குள் வந்தாலும் தனது திறமையால் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

தமிழ் சினிமாவில் ஹீரோயின் நடிகை என்றால், வெறும் கவர்ச்சி, அசட்டுப் பெண்ணாக மட்டும் நடிக்காமல், ஹீரோயின், வில்லி என வரலட்சுமி கலவையாக ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். 

 

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வரலட்சுமி, விரைவிலேயே தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, மாரி 2 ஆகிய படங்களில் குறிப்பிடும் படியாக நடித்துள்ளார். 

 

 

அதே நேரத்தில் சர்க்கார் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த வரலட்சுமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து, சிறப்பாக எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்கும் வரலட்சுமிக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றனர். 

 

 

இதனால், வரலட்சுமி தென்னிந்திய சினிமாக்களில் நடிகையாக வலம் வருகிறார். நடிகை வரலட்சு சினிமா மட்டுமல்லாமல், விலங்குகள் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலன், பெண்ணுரிமை என செயல்பாட்டாளராகவும் இருந்து வருகிறார். 

இந்நிலையில், புதிய படம் ஒன்றில் ஆக்ஷன் காட்சியில் அதகளம் செய்து வருகிறார். டைட்டான உடையில் ஆக்ஷன் காட்சியில் எதிரிகளை துவம்சம் செய்யும் அம்மணியின் அழகை பார்த்து பெருமூச்சு விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …