யூட்யூபரான ப்ளு சட்டை மாறன் ( Blue Sattai Maran ) நடிகர் அஜித்தையும் அவரது ரசிகர்களையும் தொடர்ந்து சீண்டி வருவது நெட்டிசன்களை எரிச்சலடைய செய்துள்ளது. யூட்யூப் விமர்சகராக இருந்து வருபவர் ப்ளு சட்டை மாறன்.
ஆண்டி இந்தியன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அந்தப் படத்தில் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கலாய்க்குள்ளானார். பல படங்களை நெகட்டிவ்வாக விமர்சித்தே பெரும் பிரபலமானார்.
வரைமுறை இல்லாமல் அவர் பேசும் பேச்சுக்கள் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி சினிமாக்காரர்களையும் எரிச்சலடைய செய்துள்ளது. ரஜினி, அஜித், தனுஷ் என எந்த பாரபட்சமும் இல்லாமல் நடிகர்களையும் அவர்களின் படங்களையும் படு மோசமாக விமர்சித்து வருகிறார் ப்ளு சட்டை மாறன்.சமீபத்தில் வலிமை படத்தை தரம் தாழ்ந்து விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க : “எத்தன போன் வெடிக்க போகுதுன்னு தெரியலையே..” – தொப்புளுக்கு அருகில் கேமரா.. அலற விடும் மாளவிகா மோகனன்..!
இதனால் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ப்ளு சட்டை மாறனை சரியாக சுளுக்கெடுத்தனர். இதனால் கடுப்பான ப்ளு சட்டை மாறன் தொடர்ந்து அஜித்தையும் அஜித் ரசிகர்களையும் சீண்டி வருகிறார்.
அஜித் ரசிகர்களை குறி வைத்தே ஒவ்வொரு பதிவையும் தேடி தேடி பதிவிட்டு வருகிறார். அஜித் குறித்த நெகட்டிவான பதிவு எதுவாக இருந்தாலும் அதனை ஷேர் செய்து தனது தரத்தை மேலும் தாழ்த்தி வருகிறார் ப்ளுசட்டை மாறன்.
மற்றவர்களை வெறுப்பேற்றுவதாக நினைத்து டேமேஜ் ஆகி வருகிறார் ப்ளு சட்டை மாறன்.அவருடைய பதிவுகளுக்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுப்பதை பார்த்து கொண்டாட்டமாக பதிவிட்டுள்ளார் ப்ளு சட்டை மாறன்.
இதையும் படிங்க : “42 வயசுலயும் இப்படியா..?..” – டூ பீஸ் நீச்சல் உடையில் சகலமும் தெரிய.. தெறிக்கவிடும் மாளவிகா..!
அதாவது” ஆஹா.. ஆழ்வார் பாய்ஸ் ட்ரிக்கர் ஆகி கமன்ட்ல கதறி அழுக ஆரம்பிச்சிட்டானுங்க. பாவம். வெரி ஹாப்பி… என ஸ்கூல் பாய்ஸ் போல பதிவிட்டுள்ளார் ப்ளு சட்டை மாறன்.இந்நிலையில், PVR சினிமாஸில் படம் பார்க்க சென்ற ப்ளூ சட்டை மாறனை அங்கிருந்த சிலர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதை எடுத்து வந்து பொதுவெளியில் இப்படி தாக்குதல் நடத்துவது முறையாகாது. ப்ளூ சட்டை மாறன் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
அதை விடுத்து, இப்படி தாக்குதல்கள் நடத்துவது முறையாகாது என ஒரு தரப்பு ரசிகர்களும், வாய்க்கு வந்ததை பேசுனா இப்படித்தான் ஆகும் என ஒரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.