மூளை வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்.

இன்று உள்ள சூழ்நிலையில் சில குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. அதனை உணவின் மூலம் நம்மால் சரி செய்ய முடியும்.கர்ப்பிணியாக இருக்கும்போதே இந்த மூலிகைகளை பயன்படுத்தி வந்தால் சிசுவிற்கு மூளை வளர்ச்சிக்கு மிக நல்ல முறையில் ஏற்படும். குழந்தை பிறந்த பின்பு அந்த உணவுகளை பின்பற்றுவதின் மூலம் மூளை வளர்ச்சியில் எந்தவிதமான  சிக்கலும் இல்லாமல் அதிக  அளவு ஞாபக சக்தி உள்ள குழந்தைகள்  உருவாவார்கள்.

மூளை வளர்ச்சிக்கு உதவும் மூலிகைகள்:

 மூளை பலம்பெற வேண்டுமானால் பீர்க்கங்காயை அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதனை சாம்பார், பொறியல், தோலினை தொகையாலாக்கி உண்ணலாம்.இதன் பூக்களை கஷாயமாக்கி அருந்தலாம்.

 தினமும் ஒரு நெல்லிக்காயை உண்டால் மூளையில் உள்ள புண்ணை கூட மாற்றக்கூடிய சக்தி இதற்கு உண்டு.

நாயுருவி வேரையும், கரிசலாங்கண்ணி வேரையும் இடித்து கஷாயம் காய்ச்சி காலை நேரத்தில் உணவுக்குப்பின் குடித்து வந்தால் மூளை நரம்புகள் புத்துணர்ச்சி அடைந்து மூளை நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும்.

வில்வப்பழம், அதிமதுரம், ரோஜா இதழ், ஏலக்காய் அதனுடன் கருப்பட்டி சேர்த்து அருந்தினால் மூளைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

இலந்தைப்பழம் மூளை பதட்டத்தை நீக்குவதோடு இயற்கையான உறக்கத்தையும் கொடுக்கும் இனி உறக்கம் வரவில்லை என்று நினைப்பவர்கள் தூக்கமாத்திரை எடுக்காமல் தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்கள் அம்மாடி என்று தூக்கம் கண்களை தழுவும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணியை பொடிசெய்து பாலில் கலந்து பல மாதங்கள் எடுத்துக் கொண்டால் மூளை வளர்ச்சிக்கும் மூளை குறையை நீக்கும் .தூதுவளை கீரையை ஒரு முறை பொரியல் செய்து உணவில் உட்கொண்டு வந்தாலும் செம்பருத்திப் பூ சாறு பிழிந்து கொடுத்து வந்தாலும் மூளை வலிமை பெறும்.

மேற்கூறிய எளிய உணவுப் பொருட்களை உங்கள் உணவில் ஒவ்வொருநாளும் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் மூளை மிக சுறுசுறுப்பாக செயல்படும் என்பதில் எந்தவிதமான ஐயமும் வேண்டாம்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …